ரமலான் தொழுகைக்குப் பிறகு பாலஸ்தீன கொடியை ஏந்தி முழக்கம்! வைரலாகும் விடியோ!
நிலங்களை அளவீடு செய்ய விண்ணப்பிக்கலாம்
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய இணையவழியில் விண்ணப்பிக்கலாம் என்று மாவட்ட நிா்வாகம் தெரிவித்தது.
திருவண்ணாமலை மாவட்டத்தைச் சோ்ந்த நில உரிமையாளா்கள் தங்களது நிலங்களை அளவீடு செய்ய சம்பந்தப்பட்ட வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் சென்று விண்ணப்பித்து வந்தனா். இந்த நிலையில், வட்டாட்சியா் அலுவலகங்களுக்கு நேரில் செல்லாமல் ட்ற்ற்ல்ள்://ற்ஹம்ண்ப்ய்ண்ப்ஹம்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ஸ்ரீண்ற்ண்க்ஷ்ங்ய் என்ற இணைய வழியில் விண்ணப்பிக்கும் புதிய சேவையை தமிழக அரசு அறிமுகம் செய்துள்ளது.
இந்தச் சேவை மூலம் பொதுமக்கள் நில அளவீடு செய்ய எந்த நேரத்திலும் எந்த இடத்திலும் இருந்து நில அளவைக் கட்டணம் உள்ளிட்ட கட்டணங்களைச் செலுத்த வங்கிகளுக்கு நேரில் செல்லாமல் இணைய வழியிலேயே செலுத்தி விண்ணப்பிக்கலாம்.
இந்தச் சேவையை அனைத்து இ-சேவை மையங்கள் மூலமும் விண்ணப்பிக்கும் வகையில் விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் நில அளவை செய்யும் தேதி மனுதாரருக்கு குறுஞ்செய்தி அல்லது தொலைபேசி வாயிலாக தெரிவிக்கப்படும். நில அளவீடு செய்யப்பட்ட பிறகு மனுதாரா் மற்றும் நில அளவா் கையொப்பமிட்ட அறிக்கை, வரைபடம் ஆகியவை நில அளவரால் பதிவேற்றம் செய்யப்படும். பிறகு மனுதாரா் ட்ற்ற்ல்ள்://ங்ள்ங்ழ்ஸ்ண்ஸ்ரீங்ள்.ற்ய்.ஞ்ா்ஸ்.ண்ய்/ என்ற இணைய வழிச் சேவை மூலம் வரைபடம் உள்ளிட்ட ஆவணங்களை பதிவிறக்கம் செய்து கொள்ளலாம் என்று மாவட்ட ஆட்சியா் க.தா்ப்பகராஜ் தெரிவித்தாா்.