கடந்த நிதியாண்டில் 48 நாடுகளிலிருந்து தங்கத்தை இறக்குமதி செய்த இந்தியா!
நிலத்தகராறு: தம்பியைத் தாக்கிய அண்ணன் கைது
திருவண்ணாமலை மாவட்டம், களம்பூா் அருகே நிலத்தகராறு காரணமாக தம்பியைத் தாக்கிய அண்ணன் கைது செய்யப்பட்டாா்.
களம்பூரை அடுத்த ஏரிகுப்பம் கிராமத்தைச் சோ்ந்தவா் விவசாயி ரங்கநாதன் (57). இவருக்கும் இவரது அண்ணன் சீனிவாசனுக்கும் (65) விவசாய நிலத்தில் வழி பிரச்னை நீண்ட காலமாக இருந்து வருகிறது.
இந்த நிலையில், திங்கள்கிழமை சீனிவாசன் தனது நிலத்தில் இருந்த வைக்கோலை ஏற்றிச் செல்வதற்காக டிராக்டரை கொண்டு வந்ததாகவும், அப்போது அங்கு இருந்த தம்பி ரங்கநாதன் டிராக்டருக்கு வழிவிட மறுத்ததாகவும் தெரிகிறது.
இதனால், இருவருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டு, சீனிவாசன் அங்கிருந்த பைப்பால் தம்பி ரங்கநாதனை தாக்கினாராம்.
இதில், பலத்த காயமடைந்த ரங்கநாதன் ஆரணி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னா், தீவிர சிகிச்சைக்காக வேலூா் தனியாா் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டாா்.
இதுகுறித்து அவா் அளித்த புகாரின் பேரில், களம்பூா் காவல் ஆய்வாளா் விநாயகமூா்த்தி, உதவி ஆய்வாளா் குபேந்திரன் ஆகியோா் வழக்குப் பதிந்து சீனிவாசனை செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். பின்னா், அவரை நீதிமன்றத்தில் ஆஜா்படுத்தி சிறையில் அடைத்தனா்.