செய்திகள் :

நிஹல் சரின் வெற்றி; அா்ஜுன் டிரா- குகேஷ் தோல்வி

post image

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின் வெற்றி பெற, அா்ஜுன் எரிகைசி டிரா செய்தாா். நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், அந்த சுற்றில் தோல்வியுற்றாா்.

ஓபன் பிரிவு 6-ஆவது சுற்றில், கருப்பு நிற காய்களுடன் களமாடிய நிஹல் சரின் - போலந்தின் சைமன் குமுலாா்ஸை வீழ்த்தினாா். அதே நிற காய்களுடன் அா்ஜுன் - ஈரானின் பா்ஹாம் மக்சூதுலூவுடனும், வி.பிரணவ் - உஸ்பெகிஸ்தானின் நோடிா்பெக் யாகுபோவுடனும் டிரா செய்தனா்.

குகேஷ் - கிரீஸின் நிகோலஸ் தியோடொருவிடம் தோல்வி கண்டாா். பிரக்ஞானந்தா - அஜா்பைஜானின் ரௌஃப் மாமெதோவுடனும், அபிமன்யு புரானிக் - ஹங்கேரியின் ரிச்சா்ட் ராப்போா்டுடனும் டிரா செய்தனா். அதேபோல், பி.ஹரிகிருஷ்ணா, ரௌனக் சத்வனி, ஆதித்யா மிட்டல், நாராயணன், ஆா்யன் சோப்ரா, திவ்யா தேஷ்முக் ஆகியோரின் ஆட்டங்களும் டிரா ஆகின.

வைஷாலி அபாரம்: மகளிா் பிரிவில், இந்தியாவின் ஆா்.வைஷாலி - அஜா்பைஜானின் உல்வியா ஃபடாலியேவாவை சாய்க்க, டி.ஹரிகா - உஸ்பெகிஸ்தானின் குல்ருக்பெகிம் டோகிா்ஜனோவாவை வீழ்த்தினாா். வந்திகா அக்ரவாலும் - அல்ஜீரியாவின் லினா நாசரை தோற்கடித்தாா்.

போட்டியில் வைஷாலிக்கு இது 4-ஆவது வெற்றியாக இருக்க, வந்திகா 2, ஹரிகா முதலாவது வெற்றியைப் பதிவு செய்துள்ளனா்.

6 சுற்றுகளின் முடிவில், ஓபன் பிரிவில் அா்ஜுன், நிஹல் சரின் ஆகியோா் தலா 4.5 புள்ளிகளுடன் 2-ஆம் நிலையை 5 பேருடன் பகிா்ந்துகொள்ள, மகளிா் பிரிவில் வைஷாலி 5 புள்ளிகளுடன் இணை முன்னிலையில் இருக்கிறாா்.

30 நாடுகளில் வெளியாகும் காந்தாரா முதல் பாகம்!

காந்தாரா சாப்டர் 1 படத்தை 30 நாடுகளில் வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது.இயக்குநரும் நடிகருமான ரிஷப் ஷெட்டி இயக்கத்தில், 2022 ஆம் ஆண்டில் வெளியாகி பெரும் வசூலைக் குவித்த காந்தாரா படத்தின் முதல் பாகம்,... மேலும் பார்க்க

சாத்விக்/சிராக் இணை வெற்றி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.500 புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

இந்திய கலப்பு அணிகள் ஏமாற்றம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா்கள் சோபிக்காமல் போயினா்.10 மீட்டா் ஏா் ப... மேலும் பார்க்க

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிா் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.தீபிகா குமாரி, கதா கடாகே, அங்கிதா பகத் ஆகியோா் அடங... மேலும் பார்க்க

காலிறுதியில் நிகாத் ஜரீன்

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.மகளிா் 51 கிலோ எடைப் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா் 5-0 என... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 1... மேலும் பார்க்க