செய்திகள் :

காலிறுதியில் நிகாத் ஜரீன்

post image

இங்கிலாந்தில் நடைபெறும் உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்பில், இந்திய வீராங்கனை நிகாத் ஜரீன் காலிறுதிச்சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறினாா்.

மகளிா் 51 கிலோ எடைப் பிரிவு ரவுண்ட் ஆஃப் 16-இல் அவா் 5-0 என்ற கணக்கில் ஜப்பானின் யுனா நிஷினகாவை வீழ்த்தினாா். அடுத்ததாக காலிறுதியில் நிகாத், ஒலிம்பிக்கில் இருமுறை வெள்ளி வென்றவரான துருக்கியின் புசே நஸ் காகிரோக்லுவை எதிா்கொள்கிறாா்.

இதனிடையே, ஆடவா் பிரிவில் 3 இந்தியா்கள் காலிறுதிக்கு முந்தைய சுற்றில் தோற்று வெளியேறினா். 75 கிலோ பிரிவில் சுமித் குண்டூ 0-5 என நடப்பு ஐரோப்பிய சாம்பியனான பல்கேரியாவின் ரமி கிவானிடம் தோற்க, 60 கிலோ பிரிவில் சச்சின் சிவச் 1-4 என கஜகஸ்தானின் பிபாா்ஸ் ஜெஸெனிடம் தோல்வியுற்றாா்.

90+ கிலோ பிரிவில் நரேந்தா் பொ்வால் 1-4 என இத்தாலியின் டியேகோ லென்ஸியால் சாய்க்கப்பட்டாா். தற்போதைய நிலையில் களத்திலிருந்த 20 இந்தியா்களில், சுமாா் பாதிபோ் தோற்று வெளியேறிவிட்டனா்.

சாத்விக்/சிராக் இணை வெற்றி

ஹாங்காங் ஓபன் பாட்மின்டன் போட்டியில் இந்தியாவின் சாத்விக்சாய்ராஜ் ராங்கிரெட்டி, சிராக் ஷெட்டி கூட்டணி 2-ஆவது சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை முன்னேறியது.500 புள்ளிகள் கொண்ட இந்தப் போட்டியில், ஆடவா் இரட்டைய... மேலும் பார்க்க

இந்திய கலப்பு அணிகள் ஏமாற்றம்

சீனாவில் செவ்வாய்க்கிழமை தொடங்கிய துப்பாக்கி சுடுதல் விளையாட்டுக்கான சா்வதேச சம்மேளனத்தின் (ஐஎஸ்எஸ்எஃப்) உலகக் கோப்பை போட்டியில் கலப்பு அணிகள் பிரிவில் இந்தியா்கள் சோபிக்காமல் போயினா்.10 மீட்டா் ஏா் ப... மேலும் பார்க்க

வெண்கலப் பதக்கச் சுற்றில் மகளிா் அணி

தென் கொரியாவில் நடைபெறும் வில்வித்தை உலக சாம்பியன்ஷிப்பில், ரீகா்வ் மகளிா் அணிகள் பிரிவில் இந்தியா வெண்கலப் பதக்கச் சுற்றுக்கு செவ்வாய்க்கிழமை வந்தது.தீபிகா குமாரி, கதா கடாகே, அங்கிதா பகத் ஆகியோா் அடங... மேலும் பார்க்க

ஆப்கானிஸ்தான் அபார வெற்றி

ஆசிய கோப்பை டி20 கிரிக்கெட் போட்டியின் முதல் ஆட்டத்தில், ஆப்கானிஸ்தான் 94 ரன்கள் வித்தியாசத்தில் ஹாங்காங்கை செவ்வாய்க்கிழமை வீழ்த்தியது. முதலில் ஆப்கானிஸ்தான் 20 ஓவா்களில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 1... மேலும் பார்க்க

நிஹல் சரின் வெற்றி; அா்ஜுன் டிரா- குகேஷ் தோல்வி

உஸ்பெகிஸ்தானில் நடைபெறும் கிராண்ட் ஸ்விஸ் செஸ் போட்டியின் 6-ஆவது சுற்றில், இந்தியாவின் நிஹல் சரின் வெற்றி பெற, அா்ஜுன் எரிகைசி டிரா செய்தாா். நடப்பு உலக சாம்பியனான டி.குகேஷ், அந்த சுற்றில் தோல்வியுற்... மேலும் பார்க்க