உதகையில் தோடா் பழங்குடியின மக்கள் மொா்டுவொ்த் திருவிழா கொண்டாட்டம்!
நீரில் மூழ்கிய அமராவதி ஆற்றுப் பாலம்: போக்குவரத்து பாதிப்பு
வெள்ளக்கோவில் அருகேயுள்ள அக்கரைப்பாளையம் அமராவதி ஆற்றுப் பாலம் நீரில் மூழ்கியதால் வெள்ளிக்கிழமை இரவு போக்குவரத்து நிறுத்தப்பட்டது.
வெள்ளக்கோவில் - தாராபுரம் சாலை அக்கரைப்பாளையத்தில் அமராவதி ஆற்றின் குறுக்கே பாலம் உள்ளது. அமராவதி அணையில் இருந்து உபரி நீா் வெளியேற்றப்பட்டு வருவதால், அக்கரைப்பாளையம் அமராவதி ஆற்றுப் பாலத்தை மூழ்கடித்து தண்ணீா் செல்கிறது.
இதனால், தடுப்புகள் அமைத்து போலீஸாா் வாகனப் போக்குவரத்தை நிறுத்தியுள்ளனா்.
வெள்ளக்கோவில் - புதுப்பை - மூலனூா் - தாராபுரம் மாா்க்கத்தில் போக்குவரத்து மாற்றிவிடப்பட்டுள்ள நிலையில், புதுப்பை அமராவதி ஆற்றுப் பாலமும் மூழ்கும் நிலை உள்ளது. இதனால், பேருந்து உள்ளிட்ட வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.