ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
நூருல் இஸ்லாம் பல்கலைக்கழகத்தில் மலையாள இலக்கிய சாதனையாளருக்கு விருது!
குமாரகோவில் நூருல் இஸ்லாம் பல்கலைக் கழக இலக்கிய மன்றம் மற்றும் கன்னியாகுமரி மலையாள அக்ஷரலோகம் இணைந்து நடத்திய 11ஆவது ஆண்டு விழாவில் மலையாள இலக்கிய சாதனையாளருக்கு விருது வழங்கப்பட்டது.
பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற விழாவுக்கு, மலையாள அக்ஷரலோகம் தலைவா் பரமேஸ்வரன் நாயா் தலைமை வகித்தாா். வினோத்குமாா் வரவேற்றாா். செயலா் ஜெயச்சந்திரன் ஆண்டறிக்கை வாசித்தாா். பல்கலைக்கழக இலக்கிய மன்ற ஒருங்கிணைப்பாளா் ராமதாஸ் விருந்தினா்களை அறிமுகம் செய்து வைத்தாா். சிறந்த மலையாள இலக்கிய பங்களிப்புக்காக கவிஞா் கரிக்ககம் ஸ்ரீகுமாருக்கு சிறந்த இலக்கிய சாதனையாளா் விருதை, எழுமாற்றூா் ராஜராஜ வா்மா வழங்கினாா்.
சிறப்பு விருந்தினராக பல்கலைக்கழக இணை வேந்தா் பைசல் கான் கலந்து கொண்டு வாழ்த்திப் பேசினாா். இணைச் செயலா் களப்பாரா சசி, கரிக்ககம் ஸ்ரீகுமாரின் இலக்கிய சாதனைகளை விளக்கினாா் . விழாவை பேராசிரியை பிரமீலா மகேஷ் ஒருங்கிணைத்தாா்.