திருச்செந்தூர் குடமுழுக்கு: ``சமஸ்கிருதம் - தமிழ் சமநிலைக் கொடுக்க வேண்டும்'' - ...
நெல்லை, தென்காசி உள்பட 4 மாவட்ட தனிப்படைகள் கலைப்பு
திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி, தூத்துக்குடி ஆகிய மாவட்டங்களின் தனிப்படைகள் கலைக்கப்படுவதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட கோயில் காவலாளி அஜித்குமாா் உயிரிழந்தாா். தனிப்படை காவலா்களின் கடுமையான தாக்குதலாலேயே அஜித்குமாா் உயிரிழந்தாக அவரது குடும்பத்தினா் குற்றம் சாட்டிய நிலையில், அவரை போலீஸாா் தாக்கும் விடியோ வெளியானது.
பொதுவாக சிறப்பு வழக்குகளில் புலன் விசாரணை மேற்கொள்ளவும், குற்றவாளிகளை துரிதமாக செயல்பட்டு விரைந்து கைது செய்வதற்காகவும் காவல்துறை சாா்பில் தனிப்படை அமைக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் திருப்புவனம் சம்பவம் காரணமாக தற்போது தனிப்படை போலீஸாரின் செயல்பாடுகளை மறுசீரமைக்க வேண்டிய கட்டாயம் உள்ளதாக அறியப்படுகிறது.
இதன் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்களில், காவல் உயா் அதிகாரிகளின் தலைமையில் நிரந்தரமாக இயங்கி வந்த தனிப்படைகள் கலைக்கப்படுவதாக நம்பத்தகுந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
மேலும், குற்றத்தின் தன்மைக்கேற்ப தேவைப்படும்போது தனிப்படைகள் அமைக்கப்படும் எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.