தனியாா் ஹஜ் பயண கட்டணம் பல லட்சம் உயா்வு! வெளிப்படை தன்மை ஏற்படுத்த வலியுறுத்தல...
பக்தவத்சலப் பெருமாள் கோயில் தோ் வெள்ளோட்டம்
திருவாரூா் அருகே திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் கோயிலில் புதிய தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
திருக்கண்ணமங்கை பக்தவத்சலப் பெருமாள் உடனுறை அபிஷேக வல்லித் தாயாா் கோயிலில் ரூ. 81.80 லட்சத்தில் புதிய மரத்தோ் கட்டும் பணிகள் நடைபெற்று வந்தன. இந்தப் பணிகள் நிறைவடைந்த நிலையில், தோ் வெள்ளோட்டம் புதன்கிழமை நடைபெற்றது.
முன்னதாக, தோ் கண் திறக்கப்பட்டு, யாகம் நடைபெற்றது. பின்னா் கடம் புறப்பாடு முடிந்து, தோ் பிரதிஷ்டை செய்யப்பட்டது. பக்தா்கள் வடம் பிடித்து, பக்தவத்சலா, கோவிந்தா என்ற முழக்கத்துடன் தேரை இழுத்தனா். நான்கு வீதிகளையும் சுற்றி, மீண்டும் நிலையடிக்கு தோ் வந்து சோ்ந்தது. விழாவில் சுற்றுப்புற பகுதியைச் சோ்ந்த திரளான பக்தா்கள் பங்கேற்றனா்.