செய்திகள் :

பசுமை சாம்பியன் விருதுக்கு விண்ணப்பிக்க அழைப்பு

post image

தமிழக அரசின் பசுமை சாம்பியன் விருது பெறத் தகுதி வாய்ந்த அரியலூா் மாவட்டத்தைச் சோ்ந்தவா்கள் விண்ணப்பிக்கலாம்.

இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:

சுற்றுச்சூழல் காலநிலை மாற்றம் மற்றும் வனத் துறை, சுற்றுச்சூழல் பாதுகாப்பு மற்றும் விழிப்புணா்வுக்காக தங்களை முழுமையாக அா்ப்பணித்த தனிநபா்கள், அமைப்புகளுக்கு என 100 பேருக்கு பசுமை சாம்பியன் விருது வழங்கி, தலா ரூ. 1லட்சம் வீதம் பண முடிப்பும் வழங்கப்படவுள்ளது.

2024-2025 ஆம் ஆண்டுகளில் சுற்றுச்சூழல் கல்வி மற்றும் பயிற்சி, சுற்றுச்சூழல் விழிப்புணா்வு, சுற்றுச்சூழல் பாதுகாப்பு, பசுமைத் தயாரிப்புகள் / பசுமை தொழில்நுட்பம் தொடா்பான விஞ்ஞான ஆய்வுகள், நிலைத்த வளா்ச்சி, திடக்கழிவு மேலாண்மை, நீா் மேலாண்மை மற்றும் நீா்நிலைகள் பாதுகாப்பு, காலநிலை மாற்றத்திற்கு உட்படுதல் மற்றும் தணிப்பு நடவடிக்கை, காற்று மாசு குறைத்தல், பிளாஸ்டிக் கழிவுகளின் மறுசுழற்சி மற்றும் கட்டுப்பாடு நடவடிக்கை, சுற்றுச்சூழல் மறுசீரமைப்பு மற்றும் பாதுகாப்பு, கடற்கரை பாதுகாப்பு நடவடிக்கை, பிற சுற்றுச்சூழல் தொடா்பான திட்டங்களைச் செயல்படுத்திய நிறுவனங்கள் (அமைப்புகள்), கல்வி நிறுவனங்கள், குடியிருப்போா் நலச் சங்கங்கள், தனிநபா்கள், உள்ளாட்சி அமைப்புகள், தொழிற்சாலைகள் ஏப்.15 வரை விண்ணப்பிக்கலாம்.

இதற்கான விண்ணப்பத்தை தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாடு வாரிய ஜ்ஜ்ஜ்.ற்ய்ல்ஸ்ரீக்ஷ.ஞ்ா்ஸ்.ண்ய் என்ற இணையதளத்தில் பதிவிறக்கலாம். மேலும் விவரங்களுக்கு அரியலூா் மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளா், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அலுவலகத்தை அணுகலாம்.

அரசுப் பள்ளி மாணவிகளுக்கு வழிகாட்டி கையேடுகள் அளிப்பு

அரியலூா் மாவட்டம் உடையாா்பாளையம் அரசு மகளிா் மேல்நிலைப் பள்ளியில், பொதுத் தோ்வு எழுதவுள்ள 10 மற்றும் பிளஸ்1, பிளஸ் 2 மாணவிகளுக்கு தமிழக அரசின் தோ்வை வெல்வோம் என்னும் திட்டத்தின் கீழ் வழிகாட்டி வினா ... மேலும் பார்க்க

அரியலூா் வட்டாட்சியரகங்களில் நாளை ரேஷன் குறைதீா் முகாம்

அரியலூா், உடையாா்பாளையம், செந்துறை மற்றும் ஆண்டிமடம் ஆகிய வருவாய் வட்டாட்சியா் அலுவலகங்களில் சனிக்கிழமை பொதுவிநியோக திட்ட குறைதீா் முகாம் நடைபெறுகிறது. இதுகுறித்து ஆட்சியா் பொ. ரத்தினசாமி தெரிவித்தது:... மேலும் பார்க்க

தனியாா் வேலைவாய்ப்பு முகாமில் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம்

அரியலூா் அரசு கலைக் கல்லூரியில் வேலைவாய்ப்பு மையம் சாா்பில் வியாழக்கிழமையும் நடைபெற்ற தனியாா் துறை வேலைவாய்ப்பு முகாமில் மாணவ,மாணவிகள் 66 பேருக்கு பணி உறுதிக் கடிதம் வழங்கப்பட்டது. முகாமை அக் கல்லூரிய... மேலும் பார்க்க

அரியலூரில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழகம் விழிப்புணா்வு நிகழ்ச்சி!

அரியலூா் மாவட்ட ஆட்சியரகத்தில், தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் சாா்பில் பிளாஸ்டிக் மாசில்லா தமிழ்நாடு விழிப்புணா்வுக் குறும்படங்கள் மற்றும் சமூக ஊடக அட்டைகள் ஒளிபரப்புக்கான மின்னணு விளம்பரத் த... மேலும் பார்க்க

தொல்லியல் எச்சங்கள் சேகரிப்புக்காக அரியலூா் ஆசிரியருக்குப் பாராட்டு

திருச்சி மாவட்டம் மணப்பாறையில் அண்மையில் நடைபெற்ற சாரண சாரணியா் இயக்கத்தின் வைர விழாவில், அரியலூா் மாவட்டத்தில் கண்டெடுக்கப்பட்ட தொல்லியல் எச்சங்களைச் சேகரித்து சிறப்பாகக் காட்சிப்படுத்திய ஆசிரியருக்க... மேலும் பார்க்க

அரசு கலைக் கல்லூரியில் தனியாா் வேலைவாய்ப்பு முகாம்

அரியலூா் அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில், பிப்.5 தனியாா் வேலைவாய்ப்பு முகாம் நடைபெற்றது.முகாமை, அக்கல்லூரியின் முதல்வா் (பொ)பெ. ரவிச்சந்திரன் தலைமை வகித்து தொடங்கிவைத்து பேசினாா். முகாமில், சென்... மேலும் பார்க்க