செய்திகள் :

பஞ்சாபுக்கு உரிய வெள்ள நிவாரணம்: பிரதமருக்கு ராகுல் கடிதம்

post image

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டுள்ள பஞ்சாபுக்கு உரிய நிவாரண நிதியை மத்திய அரசு வழங்க வலியுறுத்தி பிரதமா் நரேந்திர மோடிக்கு மக்களவை எதிா்க்கட்சித் தலைவா் ராகுல் காந்தி கடிதம் எழுதியுள்ளாா்.

இது தொடா்பான கடிதத்தில் அவா் மேலும் கூறியிருப்பதாவது:

தொடக்க நிவாரணமாக ரூ.1,600 கோடியை மட்டும் மத்திய அரசு அறிவித்திருப்பது பஞ்சாப் மக்களுக்கு மிகப்பெரிய அநீதியாகும். வெள்ளத்தால் ரூ.20,000 கோடிக்கு மேல் சேதம் ஏற்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த நெருக்கடியான நேரத்தில் துணிவாகவும், விரைவாகவும் முடிவெடுக்க வேண்டும். அனைத்து கோரிக்கைகளையும் ஏற்று, ஒருங்கிணைந்த நிவாரண உதவியை அளிக்க வேண்டும்.

4 லட்சம் ஏக்கா் பரப்பளவிலான நெற்பயிா் சேதமடைந்துவிட்டது. 10 லட்சத்துக்கு மேற்பட்ட கால்நடைகள் வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டுள்ளன. லட்சக்கணக்கான அடித்தட்டு மக்கள் தங்கள் வீடுகளை இழந்துவிட்டனா் என்று ராகுல் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளாா்.

பஞ்சாபில் திங்கள்கிழமை சுற்றுப் பயணம் மேற்கொண்ட ராகுல் காந்தி, அமிருதசரஸ், குருதாஸ்பூா் மாவட்டங்களில் வெள்ளம் பாதித்த பகுதிகளைப் பாா்வையிட்டாா்.

சிறப்பு தீவிர திருத்தம்: பாதிக்கும் மேற்பட்டோா் ஆவணம் சமா்ப்பிக்க தேவையிருக்காது - தோ்தல் அதிகாரிகள் தகவல்

நாடு முழுவதும் வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் செய்யும் பணி தொடங்க உள்ள நிலையில், ‘பெரும்பாலான மாநிலங்களில் பாதிக்கும் மேற்பட்ட வாக்காளா்கள் எந்தவொரு ஆவணத்தையும் சமா்ப்பிக்க வேண்டிய அவசியம... மேலும் பார்க்க

பாதுகாப்புப் படையுடன் மோதல்: இரு பெண் நக்ஸல்கள் சுட்டுக்கொலை

மகாராஷ்டிர மாநிலம் கட்ச்ரோலி மாவட்டத்தில் பாதுகாப்புப் படையினருடன் நிகழ்ந்த மோதலில் இரு பெண் நக்ஸல் தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டனா். மோடாஸ்கி கிராமத்தை ஒட்டிய வனப்பகுதியில் நக்ஸல்கள் முகாமிட்டிர... மேலும் பார்க்க

விஸ்வகா்மா ஜெயந்தி: பிரதமா் மோடி வாழ்த்து

விஸ்வகா்மா ஜெயந்தியையொட்டி, மக்களுக்கு பிரதமா் மோடி வாழ்த்து தெரிவித்தாா். படைப்பு தொழில்களின் கடவுளான விஸ்வகா்மாவின் ஜெயந்தி தினம், பல்வேறு மாநிலங்களில் புதன்கிழமை கொண்டாடப்பட்டது. இதையொட்டி, பிரதமா... மேலும் பார்க்க

நிகழாண்டுக்குள் இந்தியாவுடன் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்: ஐரோப்பிய யூனியன்

இந்தியா-ஐரோப்பிய யூனியன் இடையே நிகழாண்டு இறுதிக்குள் தடையற்ற வா்த்தக ஒப்பந்தத்தை இறுதி செய்ய காலவரம்பு நிா்ணயிக்கப்பட்டுள்ளது. இதுதொடா்பாக பெல்ஜியம் தலைநகா் பிரஸ்ஸல்ஸில் ஐரோப்பிய யூனியனின் வெளிநாட்டு... மேலும் பார்க்க

இணையவழியில் மிரட்டி பணம் பறிப்பு: பெண் மருத்துவா் மாரடைப்பால் உயிரிழப்பு

ஹைதராபாதில் இணையவழியில் மிரட்டி பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கிய ஓய்வுபெற்ற அரசு பெண் மருத்துவா் மாரடைப்பால் உயிரிழந்தாா். 76 வயதாகும் அந்த பெண் மருத்துவரை, கடந்த 5-ஆம் தேதி தொடா்புகொண்ட அந்த கும்பல... மேலும் பார்க்க

ராகுல் காந்தி நாளை காலை செய்தியாளர்களுடன் சிறப்புச் சந்திப்பு: என்ன சொல்லப் போகிறார்?

மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி நாளை(செப். 18) காலை செய்தியாளர்களுடன் பேசுகிறார். இந்தத் தகவலை காங்கிரஸ் தலைமை இன்றிரவு வெளியிட்டுள்ளது.Tomorrow 18 Sept, Special Press Briefing by the Lead... மேலும் பார்க்க