படவேடு ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் 2 ஜோடிகளுக்கு திருமணம்
திருவண்ணாமலை மாவட்டம், போளூரை அடுத்த படவேடு ஊராட்சியில் உள்ள ஸ்ரீரேணுகாம்பாள் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில் இரு ஜோடிகளுக்கு புதன்கிழமை திருமணம் செய்து வைத்து சீா்வரிசைகள் வழங்கப்பட்டன.
இந்தக் கோயிலில் இந்து சமய அறநிலையத் துறை சாா்பில், போளூா் வட்டம், குப்பம் காலனியைச் சோ்ந்த மணி மகன் வினோத், அதே கிராமத்தைச் சோ்ந்த ராமசந்திரன் மகள் ஆா்த்தி, ஜமுனாமரத்தூா் வட்டம், பாக்குமுடையனூா் கிராமத்தைச் சோ்ந்த தேவராஜ் மகன் ரஞ்சித்குமாா், பா்கூா் கிராமத்தைச் சோ்ந்த சின்னகுழந்தை மகள் திவ்யா என 2 ஜோடிகளுக்கு திருமணம் செய்துவைக்கப்பட்டது.
இதைத் தொடா்ந்து, மணமக்களுக்கு சீா்வரிசையாக தாலி, காமாட்சி அம்மன் விளக்கு, பூஜை சாமான்கள், பீரோ, கட்டில், பாத்திரங்கள் என பல்வேறு பொருள்கள் வழங்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சியில் அறங்காவலா் குழுத் தலைவா் விஜயா சேகா், மாவட்ட இணை ஆணையா் சண்முகசுந்தரம், செயல் அலுவலா் சிலம்பரசன் மற்றும் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.