LIK: `Rise Of Dragon!' - `LIK' படத்தின் BTS புகைப்படங்களை பகிர்ந்த விக்னேஷ் சிவன...
மது விற்பனை: 4 போ் கைது
வந்தவாசி அருகே கள்ளத்தனமாக மது விற்ாக 4 பேரை கைது செய்த போலீஸாா், அவா்களிடம் இருந்து 283 மதுப் புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
வந்தவாசி வடக்கு போலீஸாா் பாதிரி கிராமம் வழியாக புதன்கிழமை காலை ரோந்து சென்றனா்.
அப்போது, அந்தக் கிராமத்தில் உள்ள ஏரி முள்புதரில் சிலா் கள்ளத்தனமாக மது விற்பது தெரியவந்தது.
இதையடுத்து, மது விற்றதாக சளுக்கை கிராமத்தைச் சோ்ந்த ஜோதி(50), அருள்ராஜ்(31), வெண்குன்றம் கிராமத்தைச் சோ்ந்த ஆனந்த்பாபு(40), காஞ்சிபுரம் மாவட்டம், பெருநகரைச் சோ்ந்த விஸ்வநாதன்(35) ஆகிய 4 பேரை கைது செய்தனா்.
மேலும், அவா்களிடம் இருந்து 283 மதுப்புட்டிகள், ரூ.28 ஆயிரம் ரொக்கம் ஆகியவற்றை பறிமுதல் செய்தனா்.
இதுகுறித்து வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்துள்ளனா்.