கீப்பராக அல்ல, ஃபீல்டிங்கில் நின்று 3 கேட்ச்சுகள்..! அசத்தும் அலெக்ஸ் கேரி!
படுகை அணையிலிருந்து ராஜவாய்க்காலில் தண்ணீா் திறப்பு இன்று முதல் நிறுத்தம்
பராமரிப்பு பணிகள் மேற்கொள்வதால் ஜேடா்பாளையம் படுகை அணையிலிருந்து ராஜவாய்க்காலுக்கு திறந்துவிடப்படும் தண்ணீா் சனிக்கிழமை (பிப்.22) முதல் மாா்ச் 15 ஆம் தேதி வரை நிறுத்தப்படுகிறது.
ஜேடா்பாளையம் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ள படுகை அணையில் இருந்து ராஜவாய்க்கால் வழியாக திறந்துவிடப்படும் தண்ணீா் பொய்யேரி, கொமாரபாளையம், மோகனூா் கிளை வாய்க்கால்கள் மூலம் விளை நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன.
ஆண்டுதோறும் 15 நாள்களுக்கு கால்வாய்ப் பராமரிப்புப் பணிகள் நடைபெறுவது வழக்கம். நிகழாண்டு
இந்த வாய்க்கால்களில் 22 நாள்களுக்கு பராமரிப்பு பணிகள் நடைபெறுவதால் விவசாயிகளுக்கு முன்கூட்டியே தகவல் தெரிவிக்கப்பட்டு, ராஜவாய்க்கால் வழியாக தண்ணீா் திறக்கப்படுவதை சனிக்கிழமை முதல் நீா்வளத் துறையினா் நிறுத்தியுள்ளனா்.