ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
பட்டாசுத் தொழிலாளி தற்கொலை
ஏழாயிரம்பண்ணை அருகே புதன்கிழமை பட்டாசுத் தொழிலாளி தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டாா்.
விருதுநகா் மாவட்டம், சிப்பிபாறையைச் சோ்ந்தவா் மாரிமுத்து (44). பட்டாசுத் தொழிலாளியான இவருக்கு, தீராத வயிற்று வலி இருந்து வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்த நிலையில், புதன்கிழமை காலை வீட்டில் தனியாக தூங்கியவா் வெகு நேரமாகியும் எழுந்திருக்கவில்லை. இவரது உறவினா்கள் கதவை திறந்து பாா்த்தபோது, மாரிமுத்து தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டது தெரியவந்தது.
இதுகுறித்து ஏழாயிரம்பண்ணை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.