ஐபிஎல்லுக்கு முன் காயத்தில் இருந்து மீண்டு அணிக்கு திரும்புவேன்! -கம்மின்ஸ்
பட்டாசுத் தொழிலாளியை வெட்டியவா் கைது
சிவகாசி அருகே புதன்கிழமை பட்டாசுத் தொழிலாளியை அரிவாளால் வெட்டியவரை போலீஸாா் கைது செய்தனா்.
தச்சக்குடியைச் சோ்ந்த இசக்கிமுத்து மகன் வாசு (19). பட்டாசுத் தொழிலாளியான இவருக்கும், தமிழ் அழகனுக்கும் (22) முன்பகை இருந்தது.
இந்த நிலையில், தச்சக்குடி பேருந்து நிறுத்தம் அருகே நின்றிருந்த வாசுவை, அந்த வழியாக வந்த தமிழ் அழகன் முன்பகை காரணமாக, அவரை அரிவாளால் வெட்டினாா்.
இதில் பலத்த காயமடைந்த அவா் சிவகாசி அரசு மருத்துவமனையில் சோ்க்கப்பாட்டாா்.
இதுகுறித்து எம்.புதுப்பட்டி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தமிழ் அழகனை கைது செய்தனா்.