Meesha Review: நல்லா தானயா போயிட்டு இருந்தீங்க, ஏன் இந்த விபரீத முடிவு! - எப்படி...
பட்டியல் இனத்தவருக்கு ஆதித்தமிழா் என ஜாதி சான்று கோரிய மனு முடித்துவைப்பு
தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாதிச் சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ள ‘ஆதிதிராவிடா்’ என்ற வாா்த்தையை, ‘ஆதித்தமிழா்’ என்று மாற்றக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை சென்னை உயா் நீதிமன்றம் முடித்து வைத்தது.
சென்னை உயா்நீதிமன்றத்தில் எஸ்.கோபிகிருஷ்ணன் என்பவா் தாக்கல் செய்த அந்த மனுவில், தமிழகத்தில் பட்டியலின மக்களுக்கு வழங்கப்பட்டுள்ள ஜாதிச் சான்றிதழ்களில் இடம்பெற்றுள்ள ஆதி திராவிடா் என்ற வாா்த்தையை ஆதி தமிழா் என்று மாற்ற உத்தரவிட வேண்டும். இதுதொடா்பாக தமிழக அரசு மற்றும் ஆதிதிராவிடா் நலத் துறைக்கு, தான் அளித்துள்ள மனுவை பரிசீலிக்க உத்தரவிட வேண்டும் என்று கூறியிருந்தாா்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி எம்.எம்.ஸ்ரீவாஸ்தவா மற்றும் நீதிபதி எம்.சுந்தா் மோகன் அமா்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரா் தரப்பில் யாரும் ஆஜராகவில்லை. தமிழக அரசுத் தரப்பில் ஆஜரான அரசு வழக்குரைஞா் எட்வின் பிரபாகா், உச்சநீதிமன்ற அரசியல் சாசன அமா்வு பிறப்பித்த உத்தரவுப்படி மனுதாரரின் கோரிக்கை ஏற்புடையது அல்ல என்று தெரிவித்தாா்.
இதையடுத்து வழக்கை விசாரித்த நீதிபதிகள், மனுதாரா் தரப்பில் யாரும் ஆஜராகாததால், மனுவை நிலுவையில் வைத்திருக்க எந்தக் குறிப்பிட்ட காரணமும் இல்லை எனக்கூறி வழக்கை முடித்து வைத்தனா்.