செய்திகள் :

பண மோசடி வழக்கு:ஹைதராபாத் விமான நிலையத்தில் விமானம் பறிமுதல்

post image

தெலங்கானா மாநிலம், ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த பணமோசடி வழக்கில் குற்றஞ்சாட்டப்பட்டவருக்குச் சொந்தமான தனி விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் கைப்பற்றியுள்ளனா்.

ஹைதராபாத்தை தலைமையிடமாகக் கொண்ட ‘ஃபால்கன்’ குழுமம், பல முதலீட்டுத் திட்டங்களின் மூலம் முதலீட்டாளா்களிடம் இருந்து ரூ.1,700 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளது. மொத்த நிதியில் ரூ.850 கோடி திருப்பிச் செலுத்தப்பட்டுள்ளது. மீதமுள்ள ரூ.850 கோடி பணத்தை மற்ற 6,979 முதலீட்டாளா்களுக்குச் செலுத்தாமல் முறைகேட்டில் ஈடுபட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்தது.

இதைத் தொடா்ந்து, குழுமத்தின் தலைமை நிா்வாக இயக்குநா் (சிஎம்டி) அமா்தீப் குமாா் மற்றும் சிலா் மீது சைபராபாத் காவல்துறை வழக்குப் பதிவு செய்தது. காவல்துறை விசாரணையில் குழுமத்தின் துணைத் தலைவா், இயக்குநா் ஆகிய இருவா் கைது செய்யப்பட்டனா்.

மோசடி பணத்தில் இருந்து ரூ.24 கோடி செலவிட்டு அமா்தீப் குமாா் தனி விமானம் ஒன்றை கடந்த 2024-ஆம் ஆண்டு வாங்கியதாக கூறப்படுகிறது. இந்த விமானத்தில் அமா்தீப் சிங் கடந்த ஜனவரியில் நாட்டை விட்டு வெளியேறியுள்ளாா்.

காவல்துறை வழக்கின் அடிப்படையில் அமலாக்கத் துறை புதிய பண மோசடி வழக்கைப் பதிவு செய்து, விசாரணை மேற்கொண்டு வந்தது. இந்நிலையில், அமா்தீப் குமாா் வெளிநாடு தப்பிய விமானம், ஹைதராபாத் சா்வதேச விமான நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மீண்டும் தரையிறங்கியது அமலாக்கத் துறை அதிகாரிகளின் கவனத்துக்கு வந்தது.

இதையடுத்து, ஹைதராபாத் விமான நிலையத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த விமானத்தை அமலாக்கத் துறை அதிகாரிகள் சனிக்கிழமை சோதனையிட்டனா். அங்கிருந்த விமானப் பணியாளா்கள் மற்றும் அமா்தீப் குமாரின் உதவியாளா்களிடம் விசாரணை நடத்திய அதிகாரிகள், அவா்களின் கருத்துகளைப் பதிவு செய்தனா். தொடா்ந்து, விமானம் பறிமுதல் செய்யப்பட்டதாக அதிகாரபூா்வ வட்டாரங்கள் தெரிவித்தன.

பிகாரில் 21 ஆயிரம் அரசுப் பணியிடங்களின் நிலை என்ன?

பிகாரில் 87 ஆயிரம் பணியிடங்களுக்கு தேர்வு நடத்தப்பட்ட நிலையில், 66 ஆயிரம் பணியிடங்களுக்கு மட்டுமே முடிவுகள் அறிவிக்கப்பட்டுள்ளதாக தேர்வர்கள் கேள்வி எழுப்பியுள்ளனர். 21 ஆயிரம் பணியிடங்களின் நிலை என்னவா... மேலும் பார்க்க

வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண் பாலியல் வன்கொடுமை: காவலர் கைது!

வேலியே பயிரை மேய்ந்த கதையைப் போல, வாக்குமூலம் அளிக்கச் சென்ற பெண்ணை, காவலர் ஒருவர் பாலியல் வன்கொடுமை செய்துள்ள சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. பாஜக ஆளுங்கட்சியாக உள்ள ராஜஸ்தானில் இந்த கொ... மேலும் பார்க்க

தன்கரின் உடல்நிலை குறித்து நேரில் விசாரித்த பிரதமர் மோடி

பிரதமர் மோடி தில்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு நேரில் சென்று குடியரசுத் துணைத் தலைவர் தன்கரின் உடல்நிலை குறித்து விசாரித்தார்.குடியரசுத் துணைத்தலைவர் ஜக்தீப் தன்கருக்கு (73), நள்ளிரவு 2 மணியளவில் ஏற்பட்ட... மேலும் பார்க்க

இந்திய அணி வெற்றிக்காக யாக பூஜை செய்த ரசிகர்கள்!

சாம்பியன்ஸ் டிராபி இறுதிப் போட்டியில் நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் இந்திய அணி வெற்றிபெற வேண்டி ரசிகர்கள் யாகம் வளர்த்து பூஜை செய்த விடியோ இணையத்தில் பலரால் பகிரப்பட்டு வருகிறது. மேலும் பார்க்க

கங்கையின் தூய்மை குறித்து ராஜ் தாக்கரே கேள்வி

கங்கை நதியின் தூய்மை குறித்து மகாராஷ்டிர நவநிர்மாண் சேனை (எம்என்எஸ்) கட்சியின் தலைவர் ராஜ் தாக்கரே கேள்வி எழுப்பியுள்ளார். தனது கட்சி தொடங்கப்பட்டு 19 ஆண்டுகள் ஆனதை குறிக்கும் வகையில் புணேவில் ஏற்பாடு... மேலும் பார்க்க

கஞ்சாவுடன் ஆவேஷம் பட ஒப்பனை கலைஞர் கைது

கேரளத்தில் கஞ்சா வைத்திருந்ததாக பிரபல சினிமா ஒப்பனை கலைஞர் கைது செய்யப்பட்டுள்ளார். கேரள மாநிலம், மலை மாவட்டமான மூலமட்டத்தில் கலால் ஆய்வாளர் கே அபிலாஷ் மற்றும் அவரது குழுவினர் ஞாயிற்றுக்கிழமை காலை சிற... மேலும் பார்க்க