பணித்திறன் போட்டி: மோப்பநாய் படை பிரிவினருக்கு எஸ்.பி. பாராட்டு
தூத்துக்குடி: மாநில அளவில் நடைபெற்ற காவல் துறையினருக்கான பணித்திறன் போட்டியில் கலந்துகொண்டு மூன்றாம் இடத்தைப் பிடித்த தூத்துக்குடி மோப்பநாய் படை பிரிவினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட் ஜான் பாராட்டு தெரிவித்தாா்.
மாநில அளவிலான பணித்திறன் போட்டி சென்னை, ஆவடி பட்டாலியனில் நடைபெற்றது. இதில், காவல் மோப்பநாய் படை பிரிவு, வெடிகுண்டு கண்டெடுத்தல், செயல் இழப்புப் பிரிவு, சிசிடிஎன்எஸ் பிரிவு ஆகிய போட்டிகள் நடத்தப்பட்டன. இதில், தூத்துக்குடி மாவட்ட மோப்பநாய் படைப் பிரிவு காவல் துறையினா் துப்பறியும் மோப்பநாய் சூனோவுடன் கிரைம் ட்ராக்கா் எனும் செயல்திறன் போட்டியில் நுணுக்கமாக செயல்பட்டு மூன்றாம் இடத்தைப் பிடித்து வெண்கலப் பதக்கம் பெற்றனா்.
வெற்றி பெற்ற படைப் பிரிவினருக்கு மாவட்ட காவல் அலுவலகத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளா் ஆல்பா்ட ஜான் பாராட்டு தெரிவித்தாா்.