சென்னை உயர்நீதிமன்றத்தின் நிரந்தர நீதிபதிகளாக கூடுதல் நீதிபதிகள் நியமனம்!
பண்ருட்டியில் குடிநீா் குழாய் பதிக்கும் பணி தொடங்கிவைப்பு
கடலூா் மாவட்டம், பண்ருட்டி நகராட்சிப் பகுதிகளில் புதிய குடிநீா் குழாய்கள் பதிக்கும் பணியை பூமிபூஜை செய்து நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் புதன்கிழமை தொடங்கிவைத்தாா்.
பண்ருட்டி நகராட்சியில் உள்ள 33 வாா்டுகளிலும் கலைஞா் நகா்ப்புற மேம்பாட்டுத் திட்டத்தின் கீழ், ரூ.22.79 கோடி மதிப்பீட்டில் புதிதாக குடிநீா் குழாய் பதிக்கும் பணி நடைபெற உள்ளது. இதற்கான பூமிபூஜை புதன்கிழமை நடைபெற்றது.
பண்ருட்டி நகா்மன்றத் தலைவா் க.ராஜேந்திரன் பங்கேற்று பூமிபூஜை செய்து பணியைத் தொடங்கிவைத்தாா். நிகழ்ச்சியில் குடிநீா் பணி மேற்பாா்வையாளா் மல்லிகா, நகா்மன்ற உறுப்பினா் சண்முகவள்ளி பழனி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.