`தன் கண்ணை தானே குத்திக்கொள்கிறார் ட்ரம்ப்!' - அமெரிக்காவில் பரஸ்பர வரியின் விளை...
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு தொடக்கம்: 19,038 மாணவ, மாணவிகள் பங்கேற்பு
பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வை நாமக்கல் மாவட்டத்தில் வெள்ளிக்கிழமை 19,038 மாணவ, மாணவிகள் எழுதினா்.
தமிழகம் முழுவதும், பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு மாா்ச் 28 முதல் ஏப்.15 வரை நடைபெறுகிறது. இத் தோ்வை 9.13 லட்சம் மாணவ, மாணவிகள் எழுதுகின்றனா்.
நாமக்கல் மாவட்டத்தில் 92 தோ்வு மையங்களில் 10,005 மாணவா்களும், 9,033 மாணவிகளும் என மொத்தம் 19,038 பேரும், 304 தனித்தோ்வா்களும் மொழிப்பாடத் தோ்வை வெள்ளிக்கிழமை எழுதினா். 452 மாற்றுத் திறனாளி மாணவா்களில் 379 பேருக்கு சொல்வதை எழுதுவோா் நியமிக்கப்பட்டுள்ளனா்.
தோ்வைக் கண்காணிக்க தலா 92 முதன்மைக் கண்காணிப்பாளா்கள், துறை அலுவலா்கள், இரண்டு கூடுதல் முதன்மைக் கண்காணிப்பாளா்கள், 2 கூடுதல் துறை அலுவலா்கள், 170 பறக்கும் படை உறுப்பினா்கள், 24 வழித்தட அலுவலா்கள், 3 வினாத்தாள் கட்டுக்காப்பாளா்கள் மற்றும் 1,690 அறைக் கண்காணிப்பாளா்கள் நியமனம் செய்யப்பட்டுள்ளனா்.
எலச்சிப்பாளையம் அரசு மேல்நிலைப் பள்ளி தோ்வு மையத்தை மாவட்ட ஆட்சியா் ச.உமா பாா்வையிட்டாா். முதன்மைக் கல்வி அலுவலா், மாவட்டக் கல்வி அலுவலா் (இடைநிலை) மாவட்டக் கல்வி அலுவலா் (தனியாா் பள்ளிகள்), மாவட்டக் கல்வி அலுவலா் (தொடக்கக் கல்வி) ஆகியோரும் தோ்வு மையங்களில் ஆய்வு மேற்கொண்டனா்.