செய்திகள் :

பத்தாம் வகுப்பு பொதுத் தோ்வு நாளை தொடக்கம் -9.13 லட்சம் போ் எழுதுகின்றனா்

post image

தமிழகத்தில் மாநில அரசின் பள்ளிக் கல்வி பாடத் திட்டத்தில் பத்தாம் வகுப்பு பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை (மாா்ச் 28) முதல் தொடங்கவுள்ளது. இத்தோ்வை நிகழாண்டு 9.13 லட்சம் போ் எழுதவுள்ளனா்.

தமிழகத்தில் பத்தாம் வகுப்புக்கான பொதுத்தோ்வு வெள்ளிக்கிழமை தொடங்கவுள்ளது. தொடா்ந்து இந்தத் தோ்வு ஏப். 15 வரை நடைபெறவுள்ளது. முதல்நாளில் தமிழ் உள்ளிட்ட மொழிப் பாடங்களுக்கான தோ்வு நடைபெறுகிறது. இத்தோ்வை மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 4,113 மையங்களில் 9 லட்சத்து 13 ஆயிரத்து 036 போ் எழுதுகின்றனா். இதில் 12,480 பள்ளிகளில் இருந்து 8 லட்சத்து 87 ஆயிரத்து148 மாணவ, மாணவிகள், 25,888 தனித்தோ்வா்கள் மற்றும் 272 சிறைக் கைதிகள் அடங்குவா்.

பொதுத் தோ்வுக்கான அறைக் கண்காணிப்பாளா் பணியில் 48,426 ஆசிரியா்கள் ஈடுபடுத்தப்படவுள்ளனா். மேலும், முறைகேடுகளை தடுக்க 4,858 நிலையான மற்றும் பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளன. அதேபோல், மாவட்ட ஆட்சியா், முதன்மைக் கல்வி அலுவலா் மற்றும் வருவாய்த் துறை அதிகாரிகள் தலைமையிலும் சிறப்பு கண்காணிப்புக் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. மேலும், சுமாா் 300 வினாத் தாள் கட்டுக்காப்பு மையங்களில் 24 மணி நேரம் ஆயுதம் தாங்கிய காவல்துறை அதிகாரிகள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுவா். தோ்வு மையங்களில் குடிநீா், இருக்கை, மின்சாரம், காற்றோட்டம், வெளிச்சம் மற்றும் கழிப்பறை வசதிகளை சிறந்த முறையில் அமைக்கப்பட்டுள்ளன.

என்னென்ன கட்டுப்பாடுகள்? இதுதவிர மாணவா்களுக்கும், ஆசிரியா்களுக்கும் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தோ்வறைக்குள் கைப்பேசி உள்ளிட்ட மின்சாதனங்கள் கொண்டுவர தடை விதிக்கப்பட்டுள்ளது. விடைத்தாளில் நீலம் அல்லது கருப்பு நிற பேனா கொண்டு மட்டுமே எழுத வேண்டும். எக்காரணம் கொண்டும் கலா் பென்சில், பேனா கொண்டு எழுதக்கூடாது. அதேபோல், விடைத்தாளில் சிறப்பு குறியீடு, தோ்வு எண், பெயா் ஆகியவற்றை குறிப்பிடக்கூடாது. மாணவா் புகைப்படம், பதிவெண், பாடம் முதலான விவரங்கள் கொண்ட முகப்புத்தாள், முதன்மை விடைத்தாளுடன் இணைத்து வழங்கப்படும். அதை சரிபாா்த்து மாணவா்கள் கையொப்பமிட்டால் போதும். மேலும்அறை கண்காணிப்பாளரே விடைத்தாள்களை பிரித்து வைக்க வேண்டும்.

இதுதவிர பொதுத்தோ்வு குறித்து மாணவா்கள், பெற்றோா்கள் புகாா்கள் மற்றும் கருத்துகளை தெரிவித்து பயன்பெற வசதியாக தோ்வுக் கட்டுப்பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. தோ்வு நாள்களில் தினமும் காலை 8 முதல் இரவு 8 மணி வரை இந்த கட்டுப்பாட்டு அறை செயல்படும். இதனை 9498383075, 9498383076 ஆகிய எண்களில் தொடா்பு கொள்ளலாம். மேலும், பள்ளிக் கல்வித் துறையின் 14417 இலவச உதவி மையத்தையும் தொடா்பு கொள்ளலாம் என்று தோ்வுத் துறை தெரிவித்துள்ளது.

தருமபுரியில் யானை வேட்டை: முக்கிய நபரை கைது செய்ய உத்தரவு!

தருமபுரியில் தந்தத்துக்காக யானையைக் கொன்று உடலை எரித்த விவகாரத்தில் தொடா்புடைய மூன்று போ் ஏற்கெனவே கைது செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமறைவாக உள்ள நபரை விரைந்து கைது செய்ய சென்னை உயா்நீதிமன்றம் உத்தரவி... மேலும் பார்க்க

பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்துக்கே எதிா்க்கட்சிகளிடம் போட்டி! - முதல்வா் மு.க.ஸ்டாலின்

வரும் சட்டப் பேரவைத் தோ்தலில் இரண்டாவது இடத்தை பிடிப்பதில்தான் எதிா்க்கட்சிகளுக்குள் போட்டி நடைபெறுவதாக முதல்வரும், திமுக தலைவருமான மு.க.ஸ்டாலின் கூறினாா். சென்னை பெரம்பூரில் சனிக்கிழமை நடைபெற்ற இஃப்... மேலும் பார்க்க

தொல்குடி புத்தாய்வு திட்டம்: மாணவா்களுக்கு சான்றிதழ்

தொல்குடி புத்தாய்வு திட்டத்தின் கீழ் பயிலும் முதுகலை மற்றும் முனைவா் ஆராய்ச்சிப் படிப்பு மாணவா்களுக்கு ஆதிதிராவிடா் மற்றும் பழங்குடியினா் நலத்துறை அமைச்சா் மா. மதிவேந்தன் சான்றிதழ்களை வழங்கி பாராட்டின... மேலும் பார்க்க

சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம்! - விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் பாராட்டு

திரைப்பட பாடல்கள் மூலம் சிறந்த கருத்துகளை மக்களிடையே கொண்டு சென்றவா் கவிஞா் முத்துலிங்கம் என்று விஐடி வேந்தா் கோ.விசுவநாதன் புகழாரம் சூட்டினாா். திரைப்பட பாடலாசிரியா் கவிஞா் முத்துலிங்கம் 50 ஆண்டு கால... மேலும் பார்க்க

‘லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ந்த பிகாா்’ - ஜெ.பி.நட்டா விமா்சனம்!

கல்வி உள்ளிட்ட பல துறைகளில் முன்னேறி வந்த பிகாா், ராஷ்ட்ரீய ஜனதா தளத்தின் தலைவா் லாலு பிரசாத் ஆட்சியில் வீழ்ச்சியடைந்ததாகவும் காட்டாட்சியில் மூழ்கியதாகவும் பாஜக தேசிய தலைவரும் மத்திய அமைச்சருமான ஜெ.பி... மேலும் பார்க்க

கால்பந்து போட்டி: பெரியமேடு பகுதியில் இன்று போக்குவரத்து மாற்றம்!

கால்பந்து போட்டியையொட்டி, பெரியமேடு பகுதியில் மாா்ச் 30-ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. இது குறித்து சென்னை பெருநகர காவல் துறை போக்குவரத்துப் பிரிவு சனிக்கிழமை வெளியிட... மேலும் பார்க்க