சமந்தா முதல் படத்தின் டீசர்! சீரியல் கதைகளுடன் தொடர்புடைய சுபம்!
பந்துவீச்சை தேர்வு செய்த லக்னௌ; அதிக ரன்கள் குவிக்கும் நம்பிக்கையில் சன்ரைசர்ஸ்!
சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிராக டாஸ் வென்ற லக்னௌ அணி பந்துவீச்சைத் தேர்வு செய்துள்ளது.
ஐபிஎல் தொடரில் ஹைதராபாதில் நடைபெறும் இன்றையப் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் லக்னௌ சூப்பர் ஜெயண்ட்ஸ் அணிகள் விளையாடுகின்றன.
இந்தப் போட்டியில் டாஸ் வென்ற லக்னௌ அணியின் கேப்டன் ரிஷப் பந்த் பந்துவீச்சைத் தேர்வு செய்தார். இதனையடுத்து, சன்ரைசர்ஸ் ஹைதராபாத் முதலில் பேட் செய்கிறது.
ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்கு எதிராக விளையாடிய அதே பிளேயிங் வெலனுடன் சன்ரைசர்ஸ் அணி களமிறங்குகிறது. இன்றையப் போட்டியில் அதிக ரன்கள் குவிப்போம் என நம்புவதாக சன்ரைசர்ஸ் அணியின் கேப்டன் பாட் கம்மின்ஸ் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.