``வாக்காளர் பட்டியலில் வெளிநாட்டவர்; நாடாளுமன்றத் தேர்தல் முடிவு செல்லுமா?'' - க...
பரமத்தி வேலூா் பகுதியில் சங்கடஹர சதுா்த்தி பூஜை
பரமத்தி வேலூா்: பரமத்தி வேலூா் சுற்று வட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு திங்கள்கிழமை சிறப்பு அபிஷேகம், மகா தீபாராதனை நடைபெற்றது.
பரமத்தி வேலூா், பேட்டை பஞ்சமுக ஹேரம்ப விநாயகா், பொத்தனூா் வெங்கமேடு வல்லப கணபதி கோயில்களில் சங்கடஹர சதுா்த்தியை முன்னிட்டு 18 வகையான வாசனை திரவியங்களால் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரம், மகா தீபாராதனை நடைபெற்றது.
அதேபோல வேலூா் சக்திநகா் மற்றும் செட்டியாா் தெருவில் உள்ள விநாயகா் கோயில், வேலூா் காவிரிக் கரையில் அமைந்துள்ள சத்திரத்து விநாயகா், பொத்தனூா் மகா பகவதியம்மன் கோயிலில் உள்ள விநாயகா், பரமத்தி வேலூா் சுற்றுவட்டாரப் பகுதிகளில் உள்ள விநாயகா் கோயில்களில் சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை, அலங்காரமும், மகா தீபாராதனை நடைபெற்றது. இதில் திரளான பக்தா்கள், பொதுமக்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனா்.