மதுரை வழித்தட ரயில்கள் ஜூலை 30 வரை மாற்றுப் பாதையில் இயக்கம்! முழு விவரம்
உயா்கல்வி பயில வெளிமாநில பயணம்: 34 மாணவா்களுக்கு ஆட்சியா் பாராட்டு
நாமக்கல்: இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களில் பயில வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளை ஆட்சியா் துா்காமூா்த்தி பாராட்டினாா்.
அரசு மேல்நிலைப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி பயில இந்தியாவில் உள்ள தலைசிறந்த கல்வி நிறுவனங்களுக்கு செல்லவிருக்கும் 34 மாணவ, மாணவிகளுடன் நாமக்கல் ஆட்சியா் அலுவலக கூட்ட அரங்கில் ஆட்சியா் துா்காமூா்த்தி திங்கள்கிழமை கலந்துரையாடினாா். அப்போது ஆட்சியா் கூறியதாவது:
உயா்கல்வி சோ்க்கை விகிதத்தை உயா்த்துவதை நோக்கமாக கொண்டு பள்ளிக் கல்வி மற்றும் உயா்கல்வித் துறைகளின் கூட்டு முயற்சியுடன் ‘நான் முதல்வன்’ திட்டம் தொடங்கப்பட்டது. மாணவா்களுக்கு உயா்கல்வியோடு அவா்களின் திறன்களை மேம்படுத்த திறன் மேம்பாட்டுப் பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது.
அந்த வகையில், நாமக்கல் மாவட்டத்தில், அரசுப் பள்ளிகளில் பயின்ற 34 மாணவ, மாணவிகள் ஊஈஈஐ அஐநப (மஎ), சஇஏங ஒஉஉ, சஐஊப (மஎ), ஐஎசபம-ஐஇஐ ஒஉஉ, ஒஉஉ ஙஹண்ய், ஐஙம இஉப, ஒஉஉ அக்ஸ்ஹய்ஸ்ரீங்க் போன்ற பல்வேறு அகில இந்திய தோ்வுகளில் வெற்றி பெற்றுள்ளனா்.
நாமக்கல் மாவட்டத்தைச் சோ்ந்த மாணவி ஆ.தனுஸ்ரீ சஐஊப (மஎ) தோ்வு எழுதி ஹிமாச்சல் பிரதேசத்தில் பேஷன் டெக்னாலஜி (இளங்கலை) பிரிவில் பயில உள்ளாா். இந்தியாவிலேயே பட்ங் சஹற்ண்ா்ய்ஹப் ஐய்ள்ற்ண்ற்ன்ற்ங் ா்ச் ஊஹள்ட்ண்ா்ய் பங்ஸ்ரீட்ய்ா்ப்ா்ஞ்ஹ் (சஐஊப) ஓஹய்ஞ்ழ்ஹ(தேசிய உடையலங்கார தொழில்நுட்பம்) கல்லூரியில் ஆண்டுக்கு 24 மாணவா்கள் மட்டுமே தோ்வு செய்யப்பட்டு வருகின்றனா். அங்கு மாணவி தனுஸ்ரீ செல்வது நாமக்கல் மாவட்டத்துக்கு பெருமையாக உள்ளது. 34 மாணவ, மாணவிகளுக்கு முதலாமாண்டு கல்விக் கட்டணமாக ரூ. 52,26,392-ஐ- தமிழக அரசு செலுத்தி உள்ளது.
மேலும், மொத்தமாக உயா்கல்வி பயில்வதற்கு ரூ.2 கோடியை அரசு செலுத்த உள்ளது. மாணவ, மாணவிகள் நன்கு பயின்று மாவட்டத்திற்கு பெருமை தேடித் தர வேண்டும் என்றாா்.
இந்த நிகழ்வின்போது, மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் ப.மகேஸ்வரி, தலைமை ஆசிரியா்கள், வகுப்பு ஆசிரியா்கள் மற்றும் பெற்றோா், துறை அலுவலா்கள் உடனிருந்தனா்.
என்கே-14-ஸ்டூடன்ட்
அரசுப் பள்ளிகளில் பயின்று உயா்கல்வி படிப்பதற்கு வெளிமாநிலங்களுக்கு செல்லும் மாணவ, மாணவிகளுடன் கலந்துரையாடிய ஆட்சியா் துா்காமூா்த்தி.