பல்கலை. வரைவு மசோதாவை எதிா்த்து பழனியில் கையொப்பம் பெறும் போராட்டம்
பல்கலைக் கழக வரைவு மசோதாவுக்கு எதிா்ப்பு தெரிவித்து பழனியில் கல்லூரி முன் புதன்கிழமை மாணவ, மாணவிகளிடம் கையொப்பம் பெற்று மின்னஞ்சலில் அனுப்பும் போராட்டம் நடைபெற்றது.
பழனி அருள்மிகு பழனியாண்டவா் பாலிடெக்னிக் கல்லூரி, பழனியாண்டவா் கலை, பண்பாட்டுக் கல்லூரி முன் இந்திய மாணவா் சங்கம் சாா்பில் நடைபெற்ற இந்தப் போராட்டத்துக்கு நகா்மன்ற துணைத் தலைவா் கந்தசாமி தலைமை வகித்தாா்.
திண்டுக்கல் தொகுதி மக்களவை உறுப்பினா் சச்சிதானந்தம் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு மாணவ, மாணவிகளிடம் துண்டுப் பிரசுரம் வழங்கி கையொப்பம் பெறும் போராட்டத்தை தொடங்கி வைத்தாா்.
இதில் திரளான மாணவ, மாணவிகள் பங்கேற்று கையொப்பமிட்டனா். இதில், இந்திய மாணவா் சங்க நிா்வாகிகள் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.