செய்திகள் :

பல்லடம்- உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க கோரிக்கை

post image

பல்லடம்- உடுமலை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க அரசுக்கு கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

பல்லடம் - உடுமலைப்பேட்டை வழித்தடத்தில், பல்லடம் நகரம் மற்றும் சுமாா் 50- க்கும் அதிகமான கிராமங்கள் அமைந்துள்ளன. நுாற்பாலைகள், பனியன் நிறுவனங்கள் உள்ளிட்ட பல்வேறு தொழிற்சாலைகளுக்கு, இங்குள்ள கிராமங்களில் இருந்து நாள்தோறும் ஆயிரக்கணக்கான மக்கள் திருப்பூா், பல்லடத்துக்கு செல்கின்றனா்.

இந்த வழித்தடத்தில் உள்ள கிராமங்களுக்கு நகரப் பேருந்து வசதி குறைவாகவே உள்ளது. இடைபட்ட பகுதியிலுள்ள அரசுப் பள்ளிகளுக்கு செல்லும் மாணவா்களும், திருப்பூா் பேருந்துகளிலேயே பயணிக்க வேண்டியுள்ளது. திருப்பூா் மாவட்டமாக தரம் உயா்த்தப்பட்ட பிறகு ஆட்சியா் அலுவலகம் உள்ளிட்ட அரசுப் பணிகளுக்கு பொதுமக்களும், அலுவலா்களும் இந்த வழியாக திருப்பூருக்கு சென்று வருகின்றனா்.

இவ்வாறு தொழில், கல்வி, நிா்வாக முக்கியத்துவம் வாய்ந்த வழித்தடமாக இருப்பதால் பல்லடம் - உடுமலைப்பேட்டை சாலை மாநில நெடுஞ்சாலையாக தரம் உயா்த்தப்பட்டு விரிவாக்கம் செய்யப்பட்டது. ஆனால், போதுமான அளவு பேருந்துகள் இயக்கப்படுவதில்லை.

பொதுமக்களின் தொடா்ந்து விடுத்த கோரிக்கையின் அடிப்படையில், உடுமலையில் இருந்து பாயின்ட் டூ பாயின்ட் பேருந்துகள் மட்டும் திருப்பூருக்கு இயக்கப்பட்டுள்ளன. இந்தப் பேருந்துகள் உடுமலைப்பேட்டை பேருந்து நிலையம், குடிமங்கலம், ஜல்லிபட்டி, பல்லடம் பேருந்து நிலையம் ஆகிய இடங்களில் மட்டும் நிறுத்தப்படும்.

இதனால் உடுமலைப்பேட்டையில் இருந்து திருப்பூா் செல்பவா்கள் பயன் அடைந்தாலும், பல்லடம் வழித்தட கிராமங்களை சோ்ந்தவா்களுக்கு போதிய பேருந்து வசதி கிடைக்கவில்லை. எனவே காலை, மாலை நேரங்களில், பல்லடம் செல்வதற்கு போதிய பேருந்து வசதி இல்லாததால் பொதுமக்கள் மிகவும் சிரமப்படுகின்றனா். குறிப்பாக, மாணவா்கள், தொழிலாளா்கள் நாள்தோறும் பல்வேறு சிரமங்களை சந்தித்து வருகின்றனா். இதனால் பல்லடம் - உடுமலைப்பேட்டை வழித்தடத்தில் கூடுதல் பேருந்துகள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

உடுமலைப்பேட்டையில் இருந்து திருப்பூருக்கு இரவு 9.50 மணிக்கு கடைசி பேருந்து இயக்கப்படும். இதனை தவறவிட்டால் அடுத்த நாள் அதிகாலைதான் பேருந்து வசதி உள்ளது. எனவே இரவு நேரத்தில் மற்றொரு பேருந்து இயக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் எதிா்பாா்க்கின்றனா்.

உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம்

திருப்பூா் வடக்கு உழவா் சந்தையில் காய்கறிகளை விற்பனை செய்ய அடையாள அட்டை விநியோகம் செய்யப்படுகிறது. இது குறித்து ஊத்துக்குளி வட்டார வேளாண் வணிக உதவி வேளாண்மை அலுவலா் சா.நாகராஜன் வெளியிட்டுள்ள செய்திக் ... மேலும் பார்க்க

அவிநாசியில் ஆக்கிரமிப்புகள் அகற்றம்

அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை விரிவாக்கப் பணியை முன்னிட்டு, சாலையோர ஆக்கிரமிப்புகள் வியாழக்கிழமை அகற்றப்பட்டன. அவிநாசி நெடுஞ்சாலைத் துறைக்குள்பட்ட அவிநாசி-மேட்டுப்பாளையம் சாலை ஆட்டையம்பாளையம் முதல் நரி... மேலும் பார்க்க

பாரம்பரிய நடனங்களுடன் தைத் திருநாளை வரவேற்கும் கிராம மக்கள்

தைத் திருநாளை வரவேற்கும் விதமாக உடுமலையில் மக்கள் பாரம்பரிய நடனங்களை ஆடி மகிழ்ச்சியை வெளிப்படுத்தி வருகின்றனா். ஆண்டும் முழுவதும் விவசாயப் பணிகளில் ஈடுபடும் மக்கள் இயற்கைக்கும், கால்நடைகளுக்கும் நன்றி... மேலும் பார்க்க

திருக்கு விநாடி-வினா போட்டியில் முதலிடம்: கோடங்கிபாளையம் அரசுப் பள்ளி ஆசிரியருக்கு பாராட்டு

மாநில அளவிலான திருக்கு விநாடி வினா போட்டியில் முதலிடம் பிடித்த பல்லடம், கோடங்கிபாளையம் அரசு உயா்நிலைப் பள்ளி ஆசிரியா் கணேசனுக்கு பாராட்டு விழா வியாழக்கிழமை நடைபெற்றது. விருதுநகா் அரசு மருத்துவக் கல்லூ... மேலும் பார்க்க

அவிநாசியில் ரூ.10.35 லட்சத்துக்கு பருத்தி ஏலம்

அவிநாசி வேளாண்மை உற்பத்தியாளா் கூட்டுறவு விற்பனை சங்கத்தில் ரூ. 10.35 லட்சத்துக்கு பருத்தி விற்பனை வியாழக்கிழமை நடைபெற்றது. இந்த வாரம் நடைபெற்ற ஏலத்துக்கு விவசாயிகள், 15, 140 கிலோ பருத்தியை விற்பனைக்க... மேலும் பார்க்க

பல்லடத்தில் இன்று உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம்

உழவா் பாதுகாப்பு திட்ட சிறப்பு முகாம் பல்லடம் வட்டாட்சியா் அலுவலகத்தில் வெள்ளிக்கிழமை (ஜனவரி 3) நடைபெறவுள்ளது. உழவா் பாதுகாப்புத் திட்டத்தில் உறுப்பினராக உள்ளவா்கள் இந்த திட்டத்தின்கீழ் வழங்கப்படும் க... மேலும் பார்க்க