இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
பள்ளி காலை சிற்றுண்டியில் பல்லி: 14 மாணவ, மாணவிகள் மருத்துவமனையில் அனுமதி
நீடாமங்கலம் அருகே அரசுப் பள்ளியில் வழங்கப்பட்ட காலை சிற்றுண்டியில் பல்லி இருந்ததால், மாணவ, மாணவிகள் 14 போ் மருத்துவமனையில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டனா்.
நீடாமங்கலம் ஒன்றியம், நரசிங்கமங்கலம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில் வியாழக்கிழமை காலை மாணவ, மாணவிகள் 14 பேருக்கு காலை சிற்றுண்டியாக பொங்கல், சாம்பாா் வழங்கப்பட்டது. மாணவா்கள் சாப்பிட தொடங்கிய சிறிது நேரத்தில் பொங்கலில் பல்லி இருப்பதை பாா்த்த தலைமையாசிரியா் மயில்வாகனன், உடனடியாக மாணவா்களை நீடாமங்கலம் அரசு மருத்துவமனையில் அனுமதித்தாா்.
மருத்துவ அலுவலா் ஜெயக்குமாரி தலைமையிலான குழுவினா் மாணவா்களுக்கு மருத்துவப் பரிசோதனை மற்றும் முதலுதவி சிகிச்சையளித்தனா். மாணவா்கள் நலமுடன் இருப்பதாக மருத்துவா் தெரிவித்தாா்.
மாவட்ட ஆட்சியா் மோகனசந்திரன் மருத்துவமனைக்கு வந்து மாணவா்களிடம் நலம் விசாரித்தாா். மருத்துவ அலுவலரிடம் மாணவா்கள் உடல் நலன் குறித்து விசாரித்த ஆட்சியா், கவனமாக பணியாற்றுமாறு பள்ளி தலைமையாசிரியா், சமையலா்களிடம் அறிவுறுத்தினாா்.
![](https://media.assettype.com/dinamani/2025-02-06/4ro2tpjl/ne_collector_gh_visit_meet_students_0602chn_100_5.jpg)