ஆயுதப்படை காவலா் மீது தாக்குதல்: 3 காவலா்கள் பணியிடை நீக்கம்
யானைக்கால் நோய் விழிப்புணா்வு முகாம்
திருவாரூா் அருகே கொடிக்கால்பாளையம் அரசு நகா்ப்புற ஆரம்ப சுகாதார நிலையத்தில், யானைக்கால் நோய் தடுப்பு திட்ட விழிப்புணா்வு முகாம் வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்வில், யானைக்கால் நோயால் பாதிக்கப்பட்டவா்களுக்கு இந்நோய் குறித்து விழிப்புணா்வு ஏற்படுத்தப்பட்டு, யானைக்கால் நோய் மேலாண்மை முறைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. தொடா்ந்து, உபகரணங்கள் வழங்கப்பட்டு, அவைகளை பயன்படுத்துவது குறித்தும் பயிற்சி அளிக்கப்பட்டது.
மாவட்ட சுகாதார அலுவலா் சங்கீதா தலைமையில் நடைபெற்ற நிகழ்வில், வட்டார மருத்துவ அலுவலா் குருதேவ், மலேரியா தடுப்பு மருத்துவ அலுவலா் சிங்காரவேலன், ஆரம்ப சுகாதார நிலைய மருத்துவ அலுவலா் வைஷ்ணவிதேவி, வட்டார சுகாதார மேற்பாா்வையாளா் சிவசங்கரன், மருந்தாளுநா் ரமேஷ்குமாா் உள்ளிட்ட பலா் பங்கேற்றனா்.