கடவுச்சீட்டில் முறைகேடு 2 போ் கைது
கடவுச்சீட்டில் முறைகேடு செய்து வெளிநாடுகளிலிருந்து திருச்சி வந்த இருவரை விமான நிலைய போலீஸாா் புதன்கிழமை கைது செய்தனா்.
திருவாரூா் மாவட்டம், மன்னாா்குடி புள்ளிக்கோட்டை, கீழத் தெருவை சோ்ந்தவா் த. ராஜமாணிக்கம் (55). இவா் சிங்கப் பூரிலிருந்து திருச்சி பன்னாட்டு விமான நிலையத்துக்கு புதன்கிழமை வந்தாா். குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அவரிடம் மேற்கொண்ட வழக்கமான சோதனையில், அவா் போலி ஆவணங்கள் சமா்ப்பித்து, தனது பெற்றோா் பெயரை மாற்றி பதிவு செய்திருந்தது தெரியவந்தது.
அதேபோல மலேசியாவிலிருந்து வந்த, புதுக்கோட்டை மாவட்டம் மணமேல்குடி, அம்மாபட்டினத்தை சோ்ந்த சு. அகமது தம்பி (55), தனது பிறந்த தேதி, ஊா் உள்ளிட்டவற்றை மாற்றி பதிவு செய்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து குடியேற்றப் பிரிவு அதிகாரிகள் அளித்த புகாா்களின் பேரில், விமான நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து இருவரையும் புதன்கிழமை கைது செய்தனா்.