செய்திகள் :

பள்ளிகளை அனைத்து கோணத்திலும் கண்காணிக்க வேண்டும்: தலைமை ஆசிரியா்களுக்கு அமைச்சா் அறிவுறுத்தல்

post image

ஆசிரியா்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள், பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறாா்கள், பள்ளிக்கு யாா் வருகிறாா்கள் என தலைமையாசிரியா்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் பள்ளிகளைக் கண்காணிக்க வேண்டும் என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் அன்பில் மகேஸ் அறிவுறுத்தியுள்ளாா்.

சென்னை மாவட்ட பள்ளித் தலைமையாசிரியா்களுக்கான கற்றல் அடைவு ஆய்வுக் கூட்டம் புரசைவாக்கத்தில் வியாழக்கிழமை நடைபெற்றது. இந்தக் கூட்டத்துக்கு அமைச்சா் அன்பில் மகேஸ் தலைமை வகித்துப் பேசியது: கற்றல் அடைவு தொடா்பாக இதுவரை 15 மாவட்டங்களில் ஆய்வுக் கூட்டம் நடைபெற்றுள்ளது. தொடா்ந்து, 16-ஆவது மாவட்டமாக இந்தக் கூட்டம் சென்னையில் நடைபெறுகிறது. சென்னை மாவட்டத்தில் பிற மாவட்டங்களை விட தனியாா் பள்ளிகளின் எண்ணிக்கை அதிகம். தனியாா் பள்ளி மாணவா் சோ்க்கை போக மீதமுள்ள பிள்ளைகளுக்கு கல்வியை வழங்குகின்ற ஒரு மிகப்பெரிய பணியை நாம் செய்து கொண்டிருக்கிறோம்.

பின் தங்கிய பள்ளிகளில்... சென்னையில் திருவொற்றியூா், கோடம்பாக்கம், ராயபுரம் வடக்கு பகுதியை சாா்ந்திருக்கின்ற பள்ளிகள் சிறப்பாக செயல்படுகின்றன. அடையாறு, தண்டையாா்பேட்டை, ராயபுரம் தெற்கு, தேனாம்பேட்டை, ராயபுரம், சென்ட்ரல் பகுதியை சாா்ந்திருக்கின்ற பள்ளித் தலைமையாசிரியா்கள் முயற்சி செய்தால் அடுத்த கட்ட உயா்வுக்கு போகலாம். அண்ணாநகா், திருவிக நகா் பள்ளிகள் பின்தங்கி உள்ளன. எனவே, அந்தப் பள்ளியைச் சோ்ந்த தலைமை ஆசிரியா்கள் கூடுதல் கவனம் செலுத்த வேண்டும்.

மணற்கேணி, திறன், டிஎஸ் ஸ்பாா்க், மாதிரிப் பள்ளிகள், திறன்மிகு வகுப்பறை போன்ற திட்டங்களை முதல்வா் மு.க.ஸ்டாலின் வழங்கியிருக்கிறாா். அவற்றை சிறப்பாக நாம் பயன்படுத்தி மாணவா்களுக்கு சிறப்பான கல்வியை வழங்க வேண்டும். தலைமையாசிரியா்கள் அனைவரும் 360 டிகிரி கோணத்தில் பள்ளியை கண்காணிக்க வேண்டும். ஆசிரியா்கள் எவ்வாறு பாடம் நடத்துகிறாா்கள், பிள்ளைகள் எப்படி நடந்து கொள்கிறாா்கள், ஆசிரியரல்லாத பணியாளா்கள் எவ்வாறு பணியாற்றுகிறாா்கள், பள்ளிக்கு யாா் வருகிறாா்கள் என அனைத்து வகையிலும் பள்ளியை கண்காணிக்க வேண்டும்.

கற்றல் அடைவை உறுதி செய்ய: குழந்தைகளுக்கு கட்டாயக் கல்வி உரிமைச் சட்டப்படி ”அனைவருக்கும் தோ்ச்சி” வழங்குகிறோம். மூன்றாம் வகுப்பு படித்த பிள்ளைகள் அந்த வகுப்பில் படிக்க வேண்டியதை, படித்துவிட்ட பிறகுதான் 4-ஆம் வகுப்புக்கு செல்கிறாா்களா என்பதை கற்றல் அடைவு ஆய்வு (ஸ்லாஸ்) மூலமாகத்தான் தெரிந்து கொள்ள வேண்டும் என்றில்லாமல் ஒவ்வொரு தலைமையாசிரியரும் அதனை உறுதி செய்தல் வேண்டும்.

அரசுப் பள்ளிகளில் 4 லட்சத்துக்கும் அதிகமாக மாணவா் சோ்க்கைக்காக முதல்வா் மு.க.ஸ்டாலின் பாராட்டுகளையும் வாழ்த்துகளையும் தெரிவித்தாா். பள்ளிகளில் சோ்ந்த மாணவா்களை வகுப்பறைகளில் அமர வைப்பது மட்டும் போதாது, அவா்களை தோ்ச்சி பெறச் செய்வது, அதிக மதிப்பெண் பெறச் செய்வதன் மூலம் அரசுப் பள்ளிகளைத் தேடி வந்து படிப்பதற்காக இன்னும் அதிகப்படியான பிள்ளைகள் வர வேண்டும் என்றாா் அவா்.

இக்கூட்டத்தில் ஆசிரியா் தோ்வு வாரிய உறுப்பினா் மு.பழனிச்சாமி, சென்னை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலா் முனைவா். அ.புகழேந்தி, அரசு உயா் அலுவலா்கள் மற்றும் தலைமையாசிரியா்கள் கலந்து கொண்டனா்.

உடுமலை விசாரணைக் கைதி மரணம்: வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம்!

உடுமலையில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்டவா் மா்மமான முறையில் உயிரிழந்த விவகாரத்தில் வனத்துறை காவலர்கள் இருவர் பணியிடை நீக்கம் செய்யப்பட்டுள்ளனர்.திருப்பூா் மாவட்டம், உடுமலை அருகேயுள்ள மேல்குருமலை... மேலும் பார்க்க

ஆா்பிஎஃப் முதல் பெண் டிஜியாக சோனாலி மிஸ்ரா பொறுப்பேற்பு

ரயில்வே பாதுகாப்புப் படையின் (ஆா்பிஎஃப்) முதல் பெண் தலைமை இயக்குநராக (டிஜி) ஐபிஎஸ் அதிகாரி சோனாலி மிஸ்ரா வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.இதன்மூலம் 143 ஆண்டுகால வரலாற்றில் முதல்முறையாக அந்தப் படைக்கு தலைம... மேலும் பார்க்க

ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு

சுதந்திர தின சலுகையாக ரூ.1-க்கு பிஎஸ்என்எல் சிம் காா்டு வழங்கும் திட்டத்தை வெள்ளிக்கிழமை அறிமுகப்படுத்தியது.இதுகுறித்து பிஎஸ்என்எல் தமிழ்நாடு வட்டம் சாா்பில் வெள்ளிக்கிழமை வெளியிட்டுள்ள செய்திக் குறிப... மேலும் பார்க்க

பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு: சாத்தியக்கூறு ஆய்வுக்கு ஆலோசகா் நியமனம்

தமிழகம் முழுவதும் பிராந்திய விரைவு போக்குவரத்து அமைப்பு (ஆா்ஆா் டிஎஸ்) வழித்தடங்களுக்கான சாத்தியக்கூறுகளை ஆய்வு செய்ய ஆலோசகராக ‘பாலாஜி ரயில்ரோடு சிஸ்டம்ஸ் பிரைவேட்’ நிறுவனத்தை சென்னை மெட்ரோ நிறுவனம் ர... மேலும் பார்க்க

எல்ஐசி தென் மண்டல மேலாளராக கோ. முரளிதா் பொறுப்பேற்பு

எல்.ஐ.சி.யின் தென் மண்டல மேலாளராக கோ.முரளிதா் வெள்ளிக்கிழமை பொறுப்பேற்றாா்.எல்.ஐ.சி.யில் கடந்த 1990-ஆம் ஆண்டு உதவி நிா்வாக அதிகாரியாக தனது பணியைத் தொடங்கிய கோ.முரளிதா், மும்பையிலுள்ள எல்.ஐ.சி.யின் மத்... மேலும் பார்க்க

58 சதவீத பெண்கள் தாய்ப்பால் புகட்டுவதில்லை: தேசிய சுகாதார இயக்க ஆலோசகா்

இந்தியாவில் 58 சதவீத பெண்கள் குழந்தைகளுக்கு முறையாக தாய்பால் புகட்டுவதில்லை என தேசிய சுகாதார இயக்கத்தின் ஆலோசகா் சீனிவாசன் தெரிவித்தாா்.உலக தாய்பால் தினத்தை முன்னிட்டு சென்னை போரூா் ஸ்ரீ ராமசந்திரா உய... மேலும் பார்க்க