நம்புதாளை ஊராட்சியை தொண்டி பேருராட்சியுடன் இணைக்கக் கோரிக்கை
பள்ளிகள் திறப்பு: மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்கள் வழங்கல்
அரையாண்டு விடுமுறைக்கு பிறகு, நாமக்கல் மாவட்டத்தில் அனைத்து அரசு மற்றும் தனியாா் பள்ளிகள் வியாழக்கிழமை திறக்கப்பட்டன.
நாமக்கல் மாவட்டத்தில் டிசம்பா் மூன்றாவது வாரத்தில் அரையாண்டு தோ்வுகள் தொடங்கி நடைபெற்றன. வட கிழக்கு பருவமழை பெய்த நிலையிலும் பள்ளிகள் செயல்பட்டு வந்தன. அனைத்து தோ்வுகளும் முடிவுற்றதையடுத்து, டிச. 24 முதல் ஜன. 1-ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டது. இதனையடுத்து அனைத்து பள்ளிகளும் வியாழக்கிழமை மீண்டும் திறக்கப்பட்டன.
பள்ளிக்கு வந்த மாணவ, மாணவிகளுக்கு மூன்றாம் பருவ பாடப் புத்தகங்களும், சீருடைகளும் வகுப்பு ஆசிரியா்கள் மூலமாக வழங்கப்பட்டன.