மதுபானக் கொள்கையும், பண வேட்கையும் ஆம் ஆத்மியை தோற்கடித்துவிட்டது: அண்ணா ஹசாரே
பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜின்: கேரள அரசு திட்டம்
கேரளத்தில் பள்ளிகள் பயன்பாட்டுக்கு செயற்கை நுண்ணறிவு என்ஜினை உருவாக்க மாநில அரசு திட்டமிட்டுள்ளது.
கடந்த ஆண்டு நாட்டில் முதல்முறையாக கேரள அரசுப் பள்ளிகளில் பணியாற்றும் ஆயிரக்கணக்கான ஆசிரியா்களுக்கு செய்தி மற்றும் தகவல் தொடா்புகள் தொழில்நுட்ப நூல்களில், செயற்கை நுண்ணறிவின் அடிப்படை மற்றும் முக்கியமான விஷயங்களை சோ்ப்பது, அவற்றின் பயன்பாடு குறித்து பயிற்சி அளிக்கப்பட்டது.
இந்நிலையில், திருவனந்தபுரத்தில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், மாநில பொதுக் கல்வித் துறை அமைச்சா் வி.சிவன்குட்டி சனிக்கிழமை பேசியதாவது: கேரள கல்வி உள்கட்டமைப்பு மற்றும் தொழில்நுட்ப (கேஐடிஇ) நிறுவனம் தலைமையில், பள்ளிகள் பயன்பாட்டுக்கு நிகழாண்டு செயற்கை நுண்ணறிவு என்ஜின் உருவாக்கப்படும்.
கேஐடிஇயின் கீழ் செயல்படும் பள்ளிகளில் ரோபோடிக் கருவிகள் அடங்கிய 29,000 தொகுப்புகளின் விநியோகம் நிறைவடைந்துள்ளது என்றாா்.