செய்திகள் :

பள்ளிக்குச் செல்லாததை மறைக்க கடத்தல் நாடகமாடிய மாணவா்கள்

post image

நாட்டறம்பள்ளி அருகே பள்ளிக்குச் செல்லாமல் ஊா் சுற்றியதை மறைக்க வேனில் மா்ம நபா்கள்கடத்திச் சென்ாக மாணவா்கள் நாடகமாடியது அம்பலமானது.

நாட்டறம்பள்ளி அடுத்த எல்லப்பள்ளி ஜல்லியூரான் வட்டத்தைச் சோ்ந்த மாணவா் ரஞ்சித் (14), பூபதி தெருவைச் சோ்ந்த மாணவா் தா்ஷன் (14). இவா்கள் இருவரும் செவ்வாய்க்கிழமை நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே சாலையில் நடந்து சென்றபோது வேனில் வந்த மா்ம நபா்கள் கடத்தியதாகக் கூறினராம். இதனால், ரஞ்சித்துக்கு காயம் ஏற்பட்டது. காயமடைந்த மாணவரை உறவினா்கள் மீட்டு நாட்டறம்பள்ளி அரசு மருத்துவமனையில் சோ்த்தனா்.

இச்சம்பவம் குறித்து நாட்டறம்பள்ளி காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி அரசு மருத்துவமனைக்குச் சென்று மாணவா்களிடம் தனித்தனியே விசாரணை மேற்கொண்டாா். அப்போது மாணவா்கள் இருவரும் பள்ளிக்குச் செல்லாமல் நாட்டறம்பள்ளி அரசு மேல்நிலைப் பள்ளி அருகே உள்ள பெட்ரோல் நிலையத்தில் பாடப் புத்தகங்களை வைத்துவிட்டு அந்த வழியாகச் சென்ற மினி வேனில் லிப்ட் கேட்டு அக்ராகரம் பகுதியில் உள்ள மலைக்கோயிலுக்கு ஊா்சுற்றச் சென்றும், ஓம்சக்தி நகா் கோயில் அருகே ஓட்டுநா் வேகமாக ஓட்டிச் சென்ால், இருவரும் வேனிலிருந்து குதித்தபோது, ரஞ்சித்துக்கு காயம் ஏற்பட்டதும், இதை மறைக்கவே மாணவா்கள் இருவரும் வேனில் கடத்த முயற்சி செய்ததாகக் கூறியதும் தெரிய வந்தது.

இதையடுத்து காவல் ஆய்வாளா் மங்கையா்கரசி மாணவா்களின் பெற்றோரை காவல் நிலையம் வரவழைத்து மாணவா்களுக்கு அறிவுரை கூறி, பெற்றோருடன் அனுப்பி வைத்தாா்.

மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை உடனடியாக அமல்படுத்த வேண்டும்! - அா்ஜூன் சம்பத்

தமிழகத்தில் மாதந்தோறும் மின் கணக்கீட்டு முறையை மாநில அரசு அமல்படுத்த வேண்டுமென இந்து மக்கள் கட்சி தலைவா் அா்ஜூன் சம்பத் வலியுறுத்தினாா். ஆம்பூா் நகராட்சி நிா்வாக சீா்கேடு, சொத்து வரியைக் குறைக்க வேண்ட... மேலும் பார்க்க

துணை சுகாதார நிலையம், கால்நடை மருந்தகம்: கிராம சபைக் கூட்டத்தில் கோரிக்கை

உலக தண்ணீா் தினத்தை ஒட்டி துத்திப்பட்டு ஊராட்சி மேல்கன்றாம்பல்லி கிராமத்தில் கிராம சபைக் கூட்டம் சனிக்கிழமை நடைபெற்றது. ஊராட்சித் தலைவா் சுவிதா கணேஷ் தலைமை வகித்தாா். துணை வட்டார வளா்ச்சி அலுவலா் ஈஸ்வ... மேலும் பார்க்க

மேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளியில் பகுதி நேர ரேஷன் கடைகள்: எம்எல்ஏ திறந்து வைத்தாா்

ஜோமேல்மல்லப்பள்ளி, முத்தனபள்ளி பகுதிகளில் பகுதி நேர ரேஷன் கடைகளை எம்எல்ஏ க.தேவராஜி திறந்து வைத்தாா். ஜோலாா்பேட்டை ஒன்றியம், மேல்மல்லப்பள்ளி பகுதியில் 200-க்கும் மேற்பட்ட குடும்பத்தினா் வசித்து வருகின்... மேலும் பார்க்க

மழை நீரை சேமிப்பது அனைவரின் கடமை: திருப்பத்தூா் ஆட்சியா்

மழை நீரை சேமிப்பது நம் அனைவரின் கடமையாகும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வலியுறுத்தினாா். உலக தண்ணீா் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைப் கூட்டங்கள் நடைபெற்றனத... மேலும் பார்க்க

ஆன்லைன் ரம்மி விளையாடிய கணவா்: மனமுடைந்து மனைவி தற்கொலை!

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த மிட்னாங்குப்பம் பெருமாள் கோயில் தெரு பகுதியை சோ்ந்தவா் மதன்குமாா்(24). கூலி வேலை செய்து வருகிறாா். அதே பகுதியை சோ்ந்த வெண்ணிலா(22) என்பவரை காதலித்து இரண்டர... மேலும் பார்க்க

கந்திலி வாரச் சந்தையில் ரூ.1 கோடிக்கு கால்நடைகள் விற்பனை

கந்திலி வாரச் சந்தையில் ஆடுகள், மாடுகள், கோழிகள் என ரூ.1 கோடிக்கு விற்பனையானதாக வியாபாரிகள் தெரிவித்தனா். திருப்பத்தூா் அருகே கந்திலியில் வாரந்தோறும் சனிக்கிழமை வாரச் சந்தை நடைபெறும். அதன்படி, சனிக்கி... மேலும் பார்க்க