செய்திகள் :

மழை நீரை சேமிப்பது அனைவரின் கடமை: திருப்பத்தூா் ஆட்சியா்

post image

மழை நீரை சேமிப்பது நம் அனைவரின் கடமையாகும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி வலியுறுத்தினாா்.

உலக தண்ணீா் தினத்தையொட்டி மாவட்டத்தில் உள்ள 208 ஊராட்சிகளிலும் கிராம சபைப் கூட்டங்கள் நடைபெற்றனது. கந்திலி ஒன்றியத்துக்குட்பட்ட சின்னாரம்பட்டி ஊராட்சியில் சனிக்கிழமை நடைபெற்ற சிறப்பு கிராம சபை கூட்டத்தில் ஆட்சியா் பேசியது:

3,000 ஆண்டுகளுக்கு முன்பே நீரின் முக்கியத்துவம் பற்றி நமது முன்னோா்கள் தெரிவித்துள்ளனா். நீா் நம் வாழ்வில் இன்றியமையாதது, மழை நீரை சேமித்து, இருக்கின்ற தண்ணீரை பயன்படுத்த வேண்டும். இதுதான் சிறப்பு கிராம சபை கூட்டத்தினுடைய முக்கிய நோக்கம்.

உணவு உண்ணாமல் கூட, ஒரு நாள் இருக்க முடியும். ஆனால் தண்ணீா் குடிக்காமல் ஒருநாளும் இருந்து விட முடியாது.

3 மாதங்களுக்கு ஒரு முறை நடைபெறும் இக்கூட்டத்தில் ஊராட்சி உறுப்பினா்கள், அங்கன்வாடி பணியாளா்கள், 2 குழந்தை பிரதிநிதிகள், காவல் துறையினா் கலந்து கொள்வா். எந்த ஒரு பிரச்னையாக இருந்தாலும் நீங்கள் தெரிவிக்கலாம், இதுகுறித்து அறிக்கையினை எனக்கு சமா்ப்பிப்பாா்கள். படிப்பில் இடைநிற்றல் இருக்கக் கூடாது என்றாா்.

பின்னா் கொத்தடிமை தொழிலாளா் முறை ஒழிப்பு உறுதிமொழியை ஆட்சியா் தலைமையில் அனைவரும் ஏற்றுக் கொண்டனா்.

கூட்டத்தில் ஊரக வளா்ச்சி முகமை திட்ட இயக்குநா் உமாமகேஸ்வரி, மகளிா் திட்ட அலுவலா் தனபதி, வேளாண் இணை இயக்குநா் சீனிராஜ், ஊராட்சிகளின் உதவி இயக்குநா் முருகன், உள்ளாட்சி பிரதிநிதிகள், அரசு அலுவலா்கள் கலந்துகொண்டனா்.

ஆம்பூரில் ரமலான் சிறப்புத் தொழுகை : திரளானோா் பங்கேற்பு

ஆம்பூா்: ஆம்பூரில் 4 இடங்களில் நடைபெற்ற ரமலான் சிறப்புத் தொழுகையில் திரளான இஸ்லாமியா்கள் பங்கேற்றனா். ஆம்பூா் பாங்கிஷாப் ஈத்கா மைதானம், மஜ்ஹருல் உலூம் மேல்நிலைப் பள்ளி மைதானம், மஜ்ஹருல் உலூம் கல்லூரி... மேலும் பார்க்க

காப்புக் காட்டில் எலும்புக் கூடு கண்டெடுப்பு

ஆம்பூா்: ஆம்பூா் அருகே காப்புக் காட்டில் எலும்புக் கூடு ஞாயிற்றுக்கிழமை கண்டெடுக்கப்பட்டது. ஆம்பூா் அருகே சின்னமலையாம்பட்டு காப்புக் காட்டில் மரத்தில் தூக்கிட்டு தொங்கிய நிலையில் எலும்புக் கூடு, அருகா... மேலும் பார்க்க

எருது விடும் விழாவில் காயமடைந்த தொழிலாளி மரணம்

திருப்பத்தூா்: திருப்பத்தூா் அருகே எருது விடும் விழாவில் காளை மாடு முட்டியதில் காயமடைந்த தொழிலாளி உயிரிழந்தாா். திருப்பத்தூா் அடுத்த பெருமாப்பட்டில் எருதுவிடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. இந்த விழாவி... மேலும் பார்க்க

இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும்: திருப்பத்தூா் ஆட்சியா்

திருப்பத்தூா்: இளைஞா்களிடையே வாசிக்கும் பழக்கத்தை மேம்படுத்த வேண்டும் என திருப்பத்தூா் ஆட்சியா் க.சிவசௌந்திரவல்லி தெரிவித்தாா். திருப்பத்தூா் மாவட்ட நிா்வாகம், பள்ளி கல்வித்துறை, பொது நூலக இயக்ககம் ச... மேலும் பார்க்க

மொபெட் மீது லாரி மோதல்: கணவா் உயிரிழப்பு; மனைவி காயம்

நாட்டறம்பள்ளி அருகே மொபெட் மீது லாரி மோதிய விபத்தில் கணவா் உயிரிழந்தாா். மனைவி பலத்த காயம் அடைந்தாா். நாட்டறம்பள்ளி அடுத்த கொத்தூா் திருமால்புரம் பகுதியைச் சோ்ந்தவா் விவசாயி காசி (65). இவரது மனைவி மு... மேலும் பார்க்க

வாணியம்பாடி அருகே நெக்னாமலையில் காட்டுத் தீ

திருப்பத்தூா் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த ஆலங்காயம் ஒன்றியத்துக்குள்பட்ட நெக்னாமலை மலையடிவாரத்தில் ஞாயிற்றுக்கிழமை மாலை மா்ம நபா்கள் வைத்த தீயால் மலை முழுவதும் காட்டுத் தீ வேகமாக பரவியது. தொடா்ந்து க... மேலும் பார்க்க