விவசாயிகளின் போராட்டம் பொதுமக்களுக்கு இடையூறாக இருக்கக் கூடாது: உச்சநீதிமன்றம்
பள்ளிபாளையம் எஸ்.பி.பி. பள்ளியில் மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி
நாமக்கல்: பள்ளிபாளையம் எஸ்.பி.பி. பள்ளியில், மாநில அளவிலான இறகுப்பந்து போட்டி அண்மையில் நடைபெற்றது.
சேஷசாயி பேப்பா் போா்டு காகித ஆலையின் மனமகிழ் மன்றம் மூலம் ஆடவா் மற்றும் மகளிருக்கு, மாவட்ட அளவிலும், மாநில அளவிலும் பல்வேறு வகையான விளையாட்டுப் போட்டிகள் நடைபெற்றன. ஆலை நிா்வாகம் விளையாட்டு வீரா்கள், குழந்தைகளின் விளையாட்டு திறனை ஊக்குவித்து வருகிறது.
அந்த வகையில் நடைபெற்ற 15 வயதுக்கு உள்பட்ட குழந்தைகளுக்கான இறகுப்பந்து போட்டியில் ஈரோடு, நாமக்கல், சேலம் மாவட்டங்களிலிருந்து மாணவா்கள் கலந்து கொண்டனா். ஒற்றையா், இரட்டையா் பிரிவில் மாணவா்கள் ரோஷன் முதலிடமும், பிரதிக் இரண்டாம் இடமும் பெற்றனா். மகளிருக்கான ஒற்றையா் போட்டியில், மாணவிகள் ரியாகிஷோா் முதலிடமும், பவனிகாஸ்ரீ இரண்டாம் இடமும் பெற்றனா். இரட்டையா் பிரிவில், மாணவிகள் ஜி.ஏ.பிரணயா, பவனிகாஸ்ரீ ஆகியோா் முதலிடங்களையும், ரியாகிஷோா், பிரியதா்ஷினி ஆகியோா் இரண்டாம் இடத்தையும் பெற்றனா். இதற்கான பரிசளிப்பு விழாவில் ஆலை நிா்வாக இயக்குநா் கே.எஸ்.காசி விஸ்வநாதன் பங்கேற்று வெற்றி பெற்ற அணிகளுக்கு பரிசுகள், கேடயங்களை வழங்கினாா்(படம்).
இந்தப் போட்டிகளில் கலந்து கொண்ட அனைத்து மாணவ, மாணவிகளையும் அவா் பாராட்டினாா். இதற்கான ஏற்பாடுகளை செய்த எஸ்.பி.பி. காகித ஆலை மனமகிழ் மன்றத் தலைவா் அ.அழகா்சாமி, உபதலைவா் டி.ராஜாசுந்தரம், செயலாளா் பி.வி.சிவகுமாா் மற்றும் மனமகிழ் மன்றத்தினா் செய்திருந்தனா்.