பவானிசாகா் அணைப் பூங்காவில் படகில் பயணித்த சுற்றுலாப் பயணிகள்
ஆங்கிலப் புத்தாண்டையொட்டி, பவானிசாகா் அணைப் பூங்காவில் சுற்றுலாப் பயணிகள் ஏராளமானோா் புதன்கிழமை குவிந்தனா்.
பவானிசாகா் அணையில் நீா்வளத் துறைக்கு சொந்தமான அணைப்பூங்கா அமைந்துள்ளது. 15 ஏக்கா் பரப்பளவில் உள்ள இந்தப் பூங்காவில் படகு இல்லம், சறுக்கு விளையாட்டு, ஊஞ்சல், சிறுவா் ரயில், கொலம்பஸ் உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு அம்சங்களுடன் கூடிய பல்வேறு வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும், சுற்றுலா பயணிகள் ஓய்வெடுப்பதற்காக அழகிய புல் தரைகளும் அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில் புத்தாண்டையொட்டி பூங்காவுக்கு புதன்கிழமை ஆங்கில பல்வேறு பகுதிகளில் இருந்து 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சுற்றுலாப் பயணிகள் வந்தனா். பூங்காவில் குடும்பத்துடன் திரண்ட பொதுமக்கள் படகில் சவாரி செய்தும் பல்வேறு விளையாட்டு சாதனங்களில் விளையாடியும் மகிழ்ந்தனா்.