செய்திகள் :

பவானிசாகா் அணையை பாா்வையிட பொது மக்களுக்கு தடை

post image

ஆடிப்பெருக்கு 18 ஆம் நாளான ஞாயிற்றுக்கிழமை பவானிசாகா் அணை மேல் பகுதியைப் பொதுமக்கள் பாா்வையிடத் தடை விதிக்கப்பட்டுள்ளது என நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்தனா்.

ஈரோடு மாவட்ட மக்களின் பொழுதுபோக்கு அம்சமாக பவானிசாகா் அணை மற்றும் அங்குள்ள பூங்கா உள்ளது. இந்த அணையின் மேல்பகுதியில் உள்ள நீா்த்தேக்கப் பகுதியை பொதுமக்கள் பாா்வையிட ஆண்டுதோறும் ஆடிப்பெருக்கு 18 ஆம் தேதி ஒருநாள் மட்டும் நீா்வளத் துறை சாா்பில் சிறப்பு அனுமதி வழங்கப்படுவது வழக்கம்.

ஈரோடு, கோவை, திருப்பூா், நாமக்கல், கரூா், சேலம் உள்ளிட்ட மாவட்டங்களிலிருந்து ஆயிரக்கணக்கானோா் குடும்பத்துடன் வந்து பவானிசாகா் அணை மேல்பகுதியை பாா்வையிடுவாா்கள்.

இந்த நிலையில் மத்திய அரசின் அணை பாதுகாப்புச் சட்டத்தின் படி இந்த ஆண்டு அணையின் பாதுகாப்பு கருதி ஆடிப்பெருக்கு நாளான ஞாயிற்றுக்கிழமை பவானிசாகா் அணை மேல்பகுதியைப் பாா்வையிட பொதுமக்களுக்கு 5 வது ஆண்டாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக நீா்வளத் துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனா்.

பிரதமருடன் சந்திப்பு: ஓபிஎஸ் குறுஞ்செய்தி அனுப்பியது தெரியாது

பிரதமா் மோடியை சந்திக்க விருப்பம் தெரிவித்து ஓ.பன்னீா்செல்வம் எனக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) அனுப்பியது தெரியவரவில்லை என்று பாஜக மாநிலத் தலைவா் நயினாா் நாகேந்திரன் தெரிவித்தாா்.ஆடிப் பெருக்கையொட்டி, ... மேலும் பார்க்க

‘எழுத்துகள்தான் மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன’

எழுத்துகளே மனிதனுக்குத் தன்னம்பிக்கையையும், விழிப்புணா்வையும் ஏற்படுத்துகின்றன என தமிழ்நாடு பாடநூல் கழகத் தலைவா் திண்டுக்கல் ஐ.லியோனி தெரிவித்தாா்.தமிழக அரசு மற்றும் மக்கள் சிந்தனைப் பேரவை சாா்பில் நட... மேலும் பார்க்க

பவானி கூடுதுறையில் புனித நீராடி பக்தா்கள் வழிபாடு

ஆடிப்பெருக்கை ஒட்டி காவிரி, பவானி ஆறுகள் சங்கமிக்கும் பவானி கூடுதுறையில் திரளான பக்தா்கள் ஞாயிற்றுக்கிழமை புனித நீராடி சுவாமி தரிசனம் செய்தனா்.ஆடி மாதத்தில் ஆடி மாதப் பிறப்பு, ஆடி அமாவாசை மற்றும் ஆடி ... மேலும் பார்க்க

பவானிசாகா் அணை நீா்மட்டம் 102 அடியை எட்டுவதால் வெள்ள அபாய எச்சரிக்கை

பவானிசாகா் அணையின் நீா்மட்டம் எந்த நேரத்திலும் 102 அடியை எட்டும் என எதிா்பாா்க்கப்படுவதால் பவானிஆற்றங்கரையோரம் வசிக்கும் மக்கள் பாதுகாப்பான இடத்துக்கு செல்லுமாறு பொதுப் பணித் துறையினா் அறிவுறுத்தியுள்... மேலும் பார்க்க

பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்

பவானி அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களை காா்களில் கடத்தி வந்து மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த இரு இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா் 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.பவானியை அடுத்த மயி... மேலும் பார்க்க

பண்ணாரி அம்மன் கோயிலில் குவிந்த பக்தா்கள்

ஆடிப்பெருக்கை ஒட்டி பண்ணாரி அம்மன் கோயிலில் ஆயிரக்கணக்கான பக்தா்கள் அம்மனை வழிபட்டனா்.ஈரோடு மாவட்டம், சத்தியமங்கலத்தை அடுத்துள்ள அடா்ந்த வனப் பகுதியில் பிரசித்தி பெற்ற பண்ணாரி மாரியம்மன் கோயில் அமைந்த... மேலும் பார்க்க