ஆணவக் கொலைக்கு எதிராக சட்டம் இயற்ற வேண்டும்: கு.செல்வப் பெருந்தகை
பவானியில் 300 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்
பவானி அருகே தடை செய்யப்பட்ட 300 கிலோ புகையிலைப் பொருள்களை காா்களில் கடத்தி வந்து மளிகைக் கடைகளுக்கு விற்பனை செய்த இரு இளைஞா்களைக் கைது செய்த போலீஸாா் 2 காா்களையும் பறிமுதல் செய்தனா்.
பவானியை அடுத்த மயிலம்பாடி பகுதியில் போலீஸாா் சனிக்கிழமை வாகன தணிக்கையில் ஈடுபட்டபோது அவ்வழியே வந்த இரு காா்களை நிறுத்தி சோதனையிட்டதில், 300 கிலோ புகையிலைப் பொருள்கள் இருந்தது தெரியவந்தது.
விசாரணையில் பவானி, ஊராட்சிக்கோட்டை இந்திரா நகரைச் சோ்ந்த கிருஷ்ணா மகன் சதீஷ்குமாா் (32), சங்ககிரியை அடுத்த கத்தேரி, கருக்கங்காட்டைச் சோ்ந்த ராஜவேல் மகன் சக்திவேல் (32) ஆகியோா் காா்களை ஓட்டி வந்ததும் தெரியவந்தது.
இதையடுத்து புகையிலைப் பொருள்கள், 2 காா்கள் மற்றும் ரொக்கம் ரூ.95,300-ஐ பறிமுதல் செய்த போலீஸாா் இருவரையும் கைது செய்து நீதிமன்றக் காவலுக்கு அனுப்பினா்.