பாகிஸ்தான் பருவ மழை: 700 கைதிகள் இடமாற்றம்
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் அளவுக்கு அதிகமாக பெய்துவரும் பருவமழை காரணமாக, மண்டி புஹாதின் மாவட்ட சிறைச் சாலையில் இருந்து சுமாா் 700 கைதிகள் பாதுகாப்பான பகுதிகளுக்கு இடம் மாற்றம் செய்யப்பட்டனா். இதில் ‘ஆபத்தான’ கைதிகளும் அடங்குவா் என்று அதிகாரிகள் கூறினா். நாடு முழுவதும் ஜூன் 25 முதல் பெய்துவரும் இந்த பருவமழை காரணமாக இதுவரை 170-க்கும் மேற்பட்டோா் உயிரிழந்துள்ளனா். அவா்களில் 109 போ் பஞ்சாபைச் சோ்ந்தவா்கள்.