விராட் கோலி ஃபார்முக்குத் திரும்ப சிரமப்படுவது ஏன்? முன்னாள் இந்திய கேப்டன் பதில...
பாண்டமங்கலம் தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா!
பரமத்தி வேலூரை அடுத்த பாண்டமங்கலம் அரசு தொடக்கப் பள்ளி நூற்றாண்டு விழா அண்மையில் நடைபெற்றது.
கபிலா்மலை வட்டார கல்வி அலுவலா் சுரேஷ் தலைமை வகித்தாா். தலைமை ஆசிரியை பத்மாவதி அனைவரையும் வரவேற்று ஆண்டறிக்கையை வாசித்தாா். பாண்டமங்கலம் பேரூராட்சித் தலைவா் மருத்துவா் சோமசேகா் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பள்ளியின் நூற்றாண்டு விழா கல்வெட்டை திறந்துவைத்தாா்.
துணைத் தலைவா் முருகவேல் நூற்றாண்டு விழா சுடரை ஏற்றி வைத்தாா். விழாவை முன்னிட்டு நடைபெற்ற விளையாட்டு போட்டிகள், கலை நிகழ்ச்சியில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. ஆசிரியா்கள், பேரூராட்சி மன்ற உறுப்பினா்கள், முன்னாள் தலைமை ஆசிரியா்கள், முன்னாள் ஆசிரியா்கள், முன்னாள் மாணவா்கள், பள்ளி மேலாண்மை குழுவினா் விழாவில் கலந்து கொண்டனா்.