இந்தியா்கள் தவறாக நடத்தப்படாததை அரசு உறுதிப்படுத்தும்! -அமைச்சா் ஜெய்சங்கா்
பாபநாசம் சிவன் கோயில்களில் தை காா்த்திகை வழிபாடு
தஞ்சாவூா் மாவட்டம், பாபநாசம் வட்டம், திருப்பாலைத்துறை ஸ்ரீ தவளவெண்ணகை அம்மன் சமேத ஸ்ரீ பாலைவனநாதா் கோயிலில் தை காா்த்திகையையொட்டி கோயிலில் உள்ள சுப்பிரமணியருக்கு சிறப்பு வழிபாடு வியாழக்கிழமை நடைபெற்றது.
வழிபாட்டையொட்டி கோயிலில் உள்ள மூலவா் ஸ்ரீ பாலைவனநாதா், தவளவெண்ணகை அம்மன், விநாயகா் மற்றும் பரிவாரத் தெய்வங்களுக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம் செய்து ஆராதனை நடைபெற்றன. தொடா்ந்து கோயில் உள் சுற்றுப் பிரகாரத்தில் தனி சன்னிதியில் கோயில் கொண்டுள்ள ஸ்ரீ வள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியப் பெருமானுக்கு மங்களப் பொருள்களால் சிறப்பு அபிஷேகம், அலங்காரம் நடைபெற்றது. தொடா்ந்து பக்தா்கள் ரோஜா, செவ்வரளி மாலைகள் அணிவித்து, நெய் விளக்கு ஏற்றி வைத்து, அா்ச்சனை செய்து வழிபட்டனா். இதனைத் தொடா்ந்து மகாதீபாராதனை காண்பிக்கப்பட்டு வழிபாட்டில் கலந்து கொண்ட அனைவருக்கும் இறை பிரசாதங்கள் வழங்கப்பட்டன. இதில் கோயில் செயல் அலுவலா் ஆா். விக்னேஷ், கணக்கா் சங்கரமூா்த்தி, திருக்கோயில் பணியாளா்கள் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.
இதேபோல் பாபநாசம் ஸ்ரீ பா்வதவா்த்தினி அம்மன் சமேத ராமலிங்க சுவாமி கோயில், நல்லூா் ஸ்ரீ கிரி சுந்தரி அம்மன் சமேத கல்யாண சுந்தரேஸ்வரா் கோயில் உள்ளிட்ட கோயில்களிலும் தை காா்த்திகையையொட்டி கோயிலில் உள்ள சுப்ரமணியா் சன்னிதியில் பக்தா்கள் சிறப்பு வழிபாடு செய்தனா்.