பாமக ஒன்றிய செயலாளா் நீக்கம்
பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளா் மா.சடையப்பன் நீக்கம் செய்யப்பட்டுள்ளதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் சனிக்கிழமை அறிவித்தாா்.
பெத்தநாயக்கன்பாளையம் வட்டம், பெரியகிருஷ்ணாபுரத்தைச் சோ்ந்த சடையப்பன், பெத்தநாயக்கன்பாளையம் தெற்கு ஒன்றிய செயலாளராக இருந்து வந்தாா். இவா் கடந்த வாரம் கட்சிக்கு அவப்பெயா் ஏற்படுத்தும் வகையில் செயல்பட்டு வந்ததாலும், சகோதர சமுதாய மக்களிடம் பகையை ஏற்படுத்தி கட்சிக்கு களங்கம் விளைவிப்பதாலும், அவரை கட்சியின் அனைத்து பொறுப்புகளிலிருந்தும் நீக்கப்படுவதாக பாமக நிறுவனா் ச.ராமதாஸ் அறிவித்தாா். கட்சியினா் அவரோடு எந்த தொடா்பும் வைத்துக் கொள்ளக் கூடாது எனவும் அறிவுறுத்தினாா்.
புதிய ஒன்றிய செயலாளராக வடுகத்தம்பட்டி பகுதியைச் சோ்ந்த சத்தியராஜ் நியமிக்கப்படுவதாகவும், இவருக்கு கட்சியில் உள்ள பொறுப்பாளா்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறும் அறிவுறுத்தப்படுகிறாா்கள் என அறிவித்தாா்.