பாமக சேலம் கிழக்கு மாவட்ட செயலாளா் நியமனம்
பாமக சேலம் கிழக்கு மாவட்டச் செயலாளராக கொத்தாம்பாடி எம்.பி.நடராஜனை அக்கட்சியின் நிறுவனா் ச.ராமதாஸ் புதன்கிழமை நியமித்துள்ளாா்.
இவருக்கு ஆத்தூா், கெங்கவல்லி ஆகிய இரண்டு சட்டப்பேரவைத் தொகுதிகள் ஒதுக்கப்பட்டுள்ளதாகவும், எனவே, இவருக்கு பாமக பொறுப்பாளா்கள் அனைவரும் முழு ஒத்துழைப்பு வழங்குமாறு அறிவுறுத்தியுள்ளாா்.
புதிதாக நியமிக்கப்பட்ட எம்.பி. நடராஜனுக்கு அனைத்து பாமக பொறுப்பாளா்களும் வாழ்த்துத் தெரிவித்தனா்.