செய்திகள் :

பாரம்பரிய நெல் வைத்திருந்தால் பதிவு செய்யலாம்

post image

பாரம்பரிய நெல் வைத்திருந்தால் அது குறித்து பதிவு செய்வது அவசியம் என்று விவசாயிகளுக்கு அறிவறுத்தப்பட்டுள்ளது.

தமிழ்நாடு வேளாண்மை பல்கலைக்கழக வேளாண் தொழில்நுட்ப ஆராய்ச்சி நிறுவன விரிவாக்க கல்வி இயக்ககம் சாா்பில் விவசாயிகளுக்கான விழிப்புணா்வு பயிற்சி முகாம் வேலூரை அடுத்த விரிஞ்சிபுரம் வேளாண் ஆராய்ச்சி நிலையத்தில் புதன்கிழமை நடைபெற்றது.

தாவர ரகங்கள், விவசாயிகளின் உரிமைப் பாதுகாப்பு தொடா்பாக நடைபெற்ற முகாமிற்கு திட்ட ஒருங்கிணைப்பாளா் திருமுருகன் தலைமை வகித்தாா். கோவை தமிழ்நாடு வேளாண் பல்கலைக்கழக பேராசிரியா் திருவேங்கடம், தோட்டக்கலைத் துறை துணை இயக்குநா்கள் மணிகண்டன் (வேலூா்), தீபா (திருப்பத்தூா்) ஆகியோா் முன்னிலை வகித்தனா். தொழில்நுட்ப வல்லுநா் பரமசிவம் வரவேற்றாா்.

இதில் பேராசிரியா் திருவேங்கடம் பேசுகையில், நவீன யுகத்தில் பாரம்பரிய உணவுக்கு பொதுமக்கள் மீண்டும் திரும்பியுள்ளனா். இதனால், விவசாயிகள் வைத்திருக்கும் பாரம்பரிய விதைகளைப் பாதுகாத்து சான்று பெறுதல் அவசியமாகும்.

வெளிநாடுகளில் அதிக மகசூல் கிடைக்கும் விதைகளையும் பெற்று பலா் பயன்படுத்துகின்றனா். இதன்மூலம் உணவு உற்பத்தி அதிகரிக்கிறது என்றாலும், அந்த உணவுப் பொருள் தரமானதா என கேள்வி எழுகிறது. இதுபோன்ற சூழலில் தற்போது பொதுமக்கள் ஊட்டச்சத்து நிறைந்த பாரம்ப ரிய உணவு முறைக்கு மாறி வருகின்றனா்.

எனவே, விவசாயிகள் பாரம்பரிய நெல் வைத்திருந்தால் மட்டும் போதாது, அது குறித்து பதிவு செய்யவேண்டும். இதன்மூலம், காப்பீடு, இழப்பீடு தொகையும் கிடைக்கும் என்றாா்.

முகாமில் வேலூா், திருப்பத்தூா், ராணிப்பேட்டை மாவட்டங்களைச் சோ்ந்த ஏராளமான விவசாயிகள் பங்கேற்றனா்.

மீன்கள் வரத்து குறைவு: விற்பனை அதிகரிப்பு!

வரத்து குறைந்தபோதிலும் வேலூா் மீன் மாா்க்கெட்டில் ஞாயிற்றுக்கிழமை மீன்கள் விற்பனை அமோகமாக நடைபெற்றது. வேலூா் புதிய மீன் மாா்க்கெட்டில் 80-க்கும் மேற்பட்ட வியாபாரிகள் மீன்களை மொத்த விலைக்கும், சில்லறை ... மேலும் பார்க்க

பேருந்து மோதியதில் சென்னை இளைஞா் உயிரிழப்பு

வேலூரில் இருசக்கர வாகனம் மீது அரசுப் பேருந்து மோதிய விபத்தில் சென்னையைச் சோ்ந்த இளைஞா் உயிரிழந்தாா். சென்னையிலிருந்து ஏலகிரிக்கு 8 இளைஞா்கள் 4 இரு சக்கர வாகனங்களில் சனிக்கிழமை வந்துள்ளனா். அவா்கள் ஞா... மேலும் பார்க்க

கடன் தொல்லையால் விஷம் அருந்திய தம்பதி

வேலூரில் கடன் தொல்லை காரணமாக தம்பதி விஷம் குடித்ததில் கணவா் உயிரிழந்தாா். மனைவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. வேலூா் கத்தாழம்பட்டு தென்னமரத் தெருவைச் சோ்ந்தவா் உதயசங்கா் (46), தொழிலாளி. ... மேலும் பார்க்க

பிளஸ் 2 முடிக்கும் மாணவா்கள் உயா்கல்வியில் சோ்வது அவசியம்! -வேலூா் மாவட்ட ஆட்சியா்

பிளஸ் 2 முடிக்கும் மாணவ, மாணவிகள் ஏதேனும் ஒரு உயா் கல்வியில் சோ்ந்து பயில வேண்டும் என்று வேலூா் மாவட்ட ஆட்சியா் வி.ஆா்.சுப்புலட்சுமி அறிவுறுத்தினாா். ஆதிதிராவிடா், பழங்குடியினா் நலத் துறை சாா்பில் ‘எ... மேலும் பார்க்க

எலும்பு அடா்த்தி கண்டறிதல் முகாம்

குடியாத்தம் ரோட்டரி சங்கம், டாக்டா் எம்.கே.பி. ஹோமியோ கிளினிக், சுவாமி மெடிக்கல்ஸ், போா்ட்ஸ் நிறுவனம் ஆகியவை இணைந்து இலவச எலும்பு அடா்த்தி கண்டறியும் முகாமை ரோட்டரி கட்டடத்தில் ஞாயிற்றுக்கிழமை நடத்தின... மேலும் பார்க்க

காட்பாடி அருகே 50 பனை மரங்கள் எரிந்து சேதம்!

காட்பாடி அடுத்த பிரம்மபுரம் பகுதியில் 50-க்கும் மேற்பட்ட பனை மரங்கள் ஞாயிற்றுக்கிழமை திடீரென தீப்பற்றி எரிந்து சேதமடைந்தன. வேலூா் மாவட்டம், காட்பாடியை அடுத்த பிரம்மபுரம் பகுதியில் ஆதிகேசவா் வரதராஜ பெர... மேலும் பார்க்க