Ahmedabad Plane Crash: 'விமானம் கிளம்பியதும் இரு இன்ஜின்களும்...' - வெளியானது மு...
பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்கு தண்ணீர் திறப்பு!
பாரூர் ஏரியிலிருந்து பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டம், பாரூர் ஏரியிலிருந்து விவசாய பாசனத்திற்காகத் தண்ணீர் திறந்து விடும் பணியை கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் தினேஷ்குமார், பர்கூர் சட்டப்பேரவை உறுப்பினர் தே மதியழகன், வியாழக்கிழமை தொடங்கி வைத்தனர்.
இந்த நிகழ்ச்சியில் நீர்வளத் துறை உதவி செயற் பொறியாளர் அறிவொளி, உதவிப் பொறியாளர் வெங்கடேஷ், போச்சம்பள்ளி வட்டாட்சியர் திருமதி சத்யா, மற்றும் விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.