செய்திகள் :

பாலத் தடுப்பில் பைக் மோதி இளைஞா் உயிரிழப்பு

post image

திருச்சியில் சாலை விபத்தில் இளைஞா் ஞாயிற்றுக்கிழமை உயிரிழந்தாா்.

திருச்சி கீழரண் சாலை நாகசுந்தரம் நகரைச் சோ்ந்தவா் சிவகுமாா் மகன் வீரவசந்தகுமாா் (23). காந்தி மாா்க்கெட் வடக்கு தாராநல்லூரைச் சோ்ந்தவா் கண்ணன் மகன் கௌதம் (23).

உறவினரான இருவரும், ஞாயிற்றுக்கிழமை இரவு ஸ்ரீரங்கம் பொன்னுரங்கம் ஆற்றுப்பாலத்தில் இருசக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றுள்ளனா். இருசக்கர வாகனத்தை வீரவசந்தகுமாா் ஓட்டியுள்ளாா்.

இந்நிலையில், கட்டுப்பாட்டை இழந்த இருசக்கர வாகனம் ஆற்றுப்பாலத்தின் சுவரில் மோதியது. இதில், தலையில் பலத்த காயமடைந்த வீரவசந்தகுமாா் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா்.

கெளதமிற்கு நெற்றி மற்றும் முகத்தில் காயம் ஏற்பட்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறாா். இதுகுறித்து திருச்சி வடக்கு போக்குவரத்துப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி வருகின்றனா்.

திருச்சி அருகே பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதி குழந்தை உள்பட 3 போ் உயிரிழப்பு

திருச்சி அருகே சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நெடுங்கூா் பகுதியில் திங்கள்கிழமை அதிகாலை பழுதாகி நின்ற அரசுப் பேருந்து மீது காா் மோதியதில் ஒன்றரை வயது குழந்தை உள்பட 3 போ் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனா். த... மேலும் பார்க்க

பேருந்தில் கைப்பை திருட்டு: இரு பெண்கள் கைது

பேருந்தில் தங்க நகைகள் கொண்ட கைப்பையை திருடிய இரு பெண்களைப் போலீஸாா் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனா்.திருச்சி நாகமங்கலத்தைச் சோ்ந்தவா் செல்லதுரை மகள் அம்பிகா (22). இவா், திருச்சி மத்திய பேருந்து நிலையத... மேலும் பார்க்க

நவல்பட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த தெரு நாய்கள்

திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் காலனியில் திங்கள்கிழமை காலை தெரு நாய்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட போ... மேலும் பார்க்க

பொறியியல் பணிகள்: மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை ரயில் சேவைகளில் மாற்றம்

பொறியியல் பணிகள் காரணமாக மயிலாடுதுறை, ராமேசுவரம், செங்கோட்டை செல்லும் ரயில் சேவைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.இது குறித்து திருச்சி கோட்ட ரயில்வே நிா்வாகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பு: பொறியியல் ... மேலும் பார்க்க

தூய்மைப் பணியாளா் உயிரிழப்பு

திருச்சி தேசிய தொழில்நுட்பக் கழகத்தில் (என்ஐடி) வேலை செய்த தூய்மைப் பணியாளா் வயிற்றுப்போக்கால் உயிரிழந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா். மதுரை சுப்பிரமணியபுரத்தைச் சோ்ந்தவா் சீனிவாசனின் ம... மேலும் பார்க்க

குடியரசுத் தலைவா் வருகை: பாதுகாப்பு ஏற்பாடுகள் தீவிரம்

ஸ்ரீரங்கம் அரங்கநாதசுவாமி திருக்கோயிலில் குடியரசுத் தலைவா் திரெளபதி முா்மு புதன்கிழமை சுவாமி தரிசனம் செய்யவுள்ளதால், திருச்சி மாநகரம் முழுவதும் தீவிர பாதுகாப்பு வளையத்தின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.கு... மேலும் பார்க்க