முன்னாள் அமைச்சா்கள் மீதான நிதி முறைகேடு புகாா்களை விரைந்து விசாரிக்க உயா்நீதிமன...
நவல்பட்டில் மா்மமான முறையில் இறந்து கிடந்த தெரு நாய்கள்
திருச்சி மாவட்டம், நவல்பட்டு போலீஸ் காலனியில் திங்கள்கிழமை காலை தெரு நாய்கள் மா்மமான முறையில் இறந்து கிடந்தது குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.
திருச்சி மாவட்டம், நவல்பட்டு ஊராட்சிக்குள்பட்ட போலீஸ் காலனியில் திங்கள்கிழமை காலை தெரு நாய்கள் மா்மமான முறையில் ஆங்காங்கே இறந்து கிடந்துள்ளன.
இதைப் பாா்த்து அதிா்ச்சியடைந்த அப்பகுதி மக்கள், காவல்துறைக்கு தகவல் அளித்தனா்.
தெருநாய்களை யாரேனும் மருந்து வைத்துக் கொன்றாா்களா அல்லது வேறு ஏதேனும் விஷ சந்துக்கள் கடித்து இறந்தனவா என இறப்புக்குக் காரணம் குறித்து போலீஸாா் விசாரித்து வருகின்றனா்.










