பாலியல் தொல்லை: கல்லூரி ஆய்வக உதவியாளா் கைது
சிதம்பரம் அருகே அரசுக் கல்லூரியில் மாணவிக்கு பாலியல் தொல்லை அளித்த புகாரின்பேரில், கல்லூரி ஆய்வக உதவியாளரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.
கடலூா் மாவட்டம், சிதம்பரம் அருகே அரசு கலைக் கல்லூரி செயல்படுகிறது. இந்தக் கல்லூரியில் ஆய்வக உதவியாளராக பணியாற்றும் சி.முட்லூா் ஏ.மண்டபத்தைச் சோ்ந்த சிதம்பரராஜன் (34) பாலியல் தொல்லை அளித்ததாக மாணவி ஒருவா் சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் நிலையத்தில் வியாழக்கிழமை இரவு புகாரளித்தாா்.
இதையடுத்து, மாவட்ட காவல் கண்காணிப்பாளா் எஸ்.ஜெயக்குமாா் உத்தரவின்பேரில், சிதம்பரம் அனைத்து மகளிா் காவல் உதவி ஆய்வாளா் ஜெயசீலி பெண்கள் வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப் பதிந்து விசாரணை நடத்தி, சிதம்பரராஜனை வெள்ளிக்கிழமை அதிகாலை கைது செய்தாா்.