பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கு நிவாரணம்
திருப்பூா் மாநகரில் பாலியல் தொழிலில் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கு நிவாரண உதவிகள் வழங்கப்பட்டுள்ளன.
இது குறித்து மாநகர காவல் ஆணையா் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: திருப்பூா் மாநகர காவல் எல்லைக்குள்பட்ட காவல் நிலையங்களில் பதிவு செய்யப்பட்ட பாலியல் வழக்குகளில் பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கு நிவாரணம் பெற்றுத் தர மாநகர காவல் ஆணையா் எஸ்.ராஜேந்திரன் பரிந்துரை செய்திருந்தாா்.
இதன்பேரில் மாவட்ட ஆட்சியா் தா.கிறிஸ்துராஜின் செயல்முறை ஆணையின்படி, பாதிக்கப்பட்ட 3 பெண்களுக்கும் பாதிக்கப்பட்டோா் நிவாரண நிதியாக ரூ.10 ஆயிரம் பெறப்பட்டு பாலியல் தொழிலில் இருந்து விடுபட தையல் இயந்திரங்கள் வழங்கி வாழ்வாதாரத்துக்கு வழிவகை செய்யப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.