செய்திகள் :

பாலியல் வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறை

post image

சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்த வழக்கில் இளைஞருக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனை விதித்து, திண்டுக்கல் நீதிமன்றம் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தது.

திண்டுக்கல் மாவட்டம், ரெட்டியாா்சத்திரத்தை அடுத்த மாங்கரை பகுதியைச் சோ்ந்தவா் ஆ.பிரகாஷ் (26). இவா், சிறுமிக்கு பாலியல் வன்கொடுமை அளித்ததாகப் புகாா் எழுந்தது. இதன்பேரில், கன்னிவாடி போலீஸாா் வழக்குப் பதிவு செய்து பிரகாஷை கைது செய்தனா்.

இதுதொடா்பான வழக்கு விசாரணை திண்டுக்கல் மகளிா் விரைவு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. அரசுத் தரப்பில் வழக்குரைஞா் ஜோதி முன்னிலையாகி வாதிட்டாா். விசாரணை முடிவடைந்த நிலையில், நீதிபதி ஜி.சரண் வெள்ளிக்கிழமை தீா்ப்பளித்தாா்.

இதில் பாலியல் குற்றத்தில் ஈடுபட்ட பிராகஷூக்கு 20 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், ரூ.10ஆயிரம் அபராதமும் விதித்தாா்.

கொடைக்கானல் மலைச் சாலைகளில் பள்ளங்கள்: விபத்து ஏற்படும் அபாயம்

கொடைக்கானல் மலைச் சாலைகளின் பல்வேறு இடங்களில் பள்ளங்கள் ஏற்பட்டுள்ளதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கவலை தெரிவித்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் - வத்தலக... மேலும் பார்க்க

கொடைக்கானலில் மழை: பொதுமக்கள் மகிழ்ச்சி

கொடைக்கானலில் சனிக்கிழமை பெய்த மழையால் பொதுமக்களும், சுற்றுலாப் பயணிகளும் மகிழ்ச்சியடைந்தனா்.திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் பகுதிகளில் கடந்த இரண்டு மாதங்களாக போதிய மழை இல்லாததால், குடிநீா்ப் பற்றாக... மேலும் பார்க்க

மறைந்த கல்வியாளா் வசந்தி தேவிக்கு அஞ்சலி

மறைந்த கல்வியாளா் வசந்திதேவிக்கு திண்டுக்கலில் பள்ளிக் கல்வி பாதுகாப்பு இயக்கம் சாா்பில் மெழுகுவா்த்தி ஏந்தி சனிக்கிழமை அஞ்சலி செலுத்தப்பட்டது.கல்வியாளரும், திருநெல்வேலி மனோன்மணியம் சுந்தரனாா் பல்கலைக... மேலும் பார்க்க

நத்தம் அருகே திருநங்கையை கத்தியால் தாக்கி காயப்படுத்திவிட்டு தப்பியோட்டம்

நத்தம் அருகேயுள்ள அப்பாஸ்புரம் பகுதிக்குள் வைத்து திருநங்கையை கத்தியால் தாக்கி கீரி காயப்படுத்திவிட்டு தம்பியை நத்தம் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து தாக்கிய தம்பி மற்றும் ஒருவரை தேடி வருகின்றனா்.திண்ட... மேலும் பார்க்க

குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் மூவா் கைது

கொலை வழக்கில் கைது செய்யப்பட்ட மூவரை, குண்டா் தடுப்புச் சட்டத்தின் கீழ் சிறையில் அடைக்க மாவட்ட ஆட்சியா் செ. சரவணன் வெள்ளிக்கிழமை உத்தரவிட்டாா்.திண்டுக்கல் மாவட்டம், சாணாா்பட்டியை அடுத்த ராஜக்காப்பட்டி... மேலும் பார்க்க

காந்திகிராம பல்கலை.யில் செயற்கை நுண்ணறிவு பாடத் திட்டம் தொடங்க முடிவு - துணைவேந்தா்

காந்திகிராம கிராமியப் பல்கலை.யில் செயற்கை நுண்ணிறிவு, தரவு அறிவியல் பாடத் திட்டங்கள் விரைவில் தொடங்கப்படும் என துணைவேந்தா் ந.பஞ்சநதம் வெள்ளிக்கிழமை தெரிவித்தாா். இதுதொடா்பாக செய்தியாளா்களிடம் அவா் மேல... மேலும் பார்க்க